உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.7 கோடி செலவில் பாடத்திட்டம் மாற்றம்

ரூ.7 கோடி செலவில் பாடத்திட்டம் மாற்றம்

சென்னை:''மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளவும், கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநுால்கள், 7 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.சட்டசபையில் , அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில், திறன் என்ற இயக்கம், 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்வாழ்வியல் திறன்கள், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், நேர்மறை எண்ணங்கள், போதை பொருளின் தீமைகள் குறித்து, 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விழிப்புணர்வு பாடம் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளில் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும்அரசு பள்ளிகளில், 46,000 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு சாதனங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படும்தொழில் பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக, 400 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும், 12,000 மாணவர்களுக்கு, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திறன் பயிற்சி வழங்கப்படும்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்அரசு தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 6,478 திறன்மிகு வகுப்பறைகள் கட்டப்படும்; மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்கடந்த ஆண்டைவிட கூடுதலாக, 50 மாணவர்களை சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளவும், கலை திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநுால்கள், 7 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்படும்மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, 1.25 லட்சம் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்தனியார் சுயநிதி மற்றும் வாரிய பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு, பாடப்பொருள், கற்பித்தல் நடைமுறைகள் சார்ந்து பயிற்சி வழங்கப்படும்தனியார் சுயநிதி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ