உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் ஓராண்டாக திணறும் கஸ்டம்ஸ்

267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் ஓராண்டாக திணறும் கஸ்டம்ஸ்

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியவர்களின் பின்னணியை கண்டுபிடிக்க முடியாமல், ஓராண்டாக சுங்கத்துறை திணறி வருகிறது.சென்னை விமான நிலையத்தில், 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள், கடந்தாண்டு ஜூன் மாதம் நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலையத்தில், 'ஏர் ஹப்' என்ற பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்திய ஷபீர் அலி என்பவர், கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.அவருடன், கடையில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் இலங்கை பயணி உட்பட ஒன்பது பேரை, சுங்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாத இறுதியில் கைது செய்தனர். விமான நிலையத்தில் கடை நடத்த உரிமம் பெற, ஷபீர் அலிக்கு பா.ஜ., பிரமுகர் பிரித்வி உதவியதும் தெரியவந்தது.இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறையில் உள்ள ஷபீர் அலி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட சிலர் மீது, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தில் கடந்தாண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இப்பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்தனர். ஓராண்டு முடியும் நிலையில், ஒரு கிராம் தங்கத்தை கூட மீட்க முடியாமல், சுங்கத்துறை திணறி வருகிறது. தற்போது, புதிய அதிகாரிகள் பொறுப்பேற்ற நிலையிலாவது, இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தனக்கு முன்பின் தெரியாத ஒருவர் வாயிலாகவே கடத்தல் நடந்ததாக, ஷபீர் அலி ஒப்புக் கொண்டுள்ளார். கடத்தல் பின்னணியில் உள்ள 'சிண்டிகேட்' குறித்து கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள், தற்போது வழக்கமான காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள், வழக்கு விசாரணையை தொடர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.mohanraj raj
ஜூன் 26, 2025 23:21

ஏன் காமெடி பண்றீங்க


Yasararafath
ஜூன் 26, 2025 12:14

இதற்கு முழு காரணம் பாஜக தான்


அப்பாவி
ஜூன் 26, 2025 10:45

பா.ஜ ஆளுங்க ரொம்ப நல்லவங்க. நம்புங்க.


venugopal s
ஜூன் 26, 2025 10:17

பாஜக பிரமுகர் ஈடுபட்டுள்ளதால் விஷயத்தை அப்படியே அமுக்கி விடுவார்கள் என்பது தெரிந்தது தானே!


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 26, 2025 09:55

தங்கம் கடத்தினார்களாம். ஆனால் அதிகாரிகளுக்கு தெரியாதாம். அப்புறம் என்ன முடிக்கு அங்கே அதிகாரிகள். இன்றைக்கு அரசாங்கத்தில் எல்லோரும் இந்த வசனத்தைத்தான் சொல்லுகிறார்கள். முதல்வர்கள் கூட விதிவிலக்கல்ல. இவனுக எல்லாம் எதற்கு ஆட்சிக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை.


Thravisham
ஜூன் 26, 2025 08:01

விதோட் விஞ்ஞானம் தந்த ஞானம்.


Kasimani Baskaran
ஜூன் 26, 2025 07:07

சென்னை விமான நிலைய கடை முதலாளிகளை உதைத்தால் நிறைய தகவல்கள் கிடைக்கும்


கணேஷ் எஸ்
ஜூன் 26, 2025 06:57

கடத்தல் விஷயத்தில் பிஜேபி மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை