உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரபிக்கடலில் நிலவும் சக்தி புயல்: தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை

அரபிக்கடலில் நிலவும் சக்தி புயல்: தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்றும் (அக் 04), நாளையும் (அக் 05) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கரையை கடக்காமல் கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.இதனால் மஹாராஷ்டிரா கடற்கரையில் பலத்த காற்று வீசும். தமிழகத்தில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:1. திருப்பத்தூர்2. கிருஷ்ணகிரி3. தர்மபுரி4. சேலம்5. நாமக்கல்6. திருச்சி7. திண்டுக்கல்8. தேனி9. மதுரை10. சிவகங்கை11. விருதுநகர்12. ராமநாதபுரம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

samt
அக் 04, 2025 19:21

தென் மாவட்டங்களில் மழை பொழிவதில்லை


malathi
அக் 04, 2025 19:10

கன மழை பெய்யட்டும் நாடு செழிக்கட்டும்


முக்கிய வீடியோ