உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஓட்டை உடைசலான ரயில்பெட்டிகள்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

தமிழகத்தில் ஓட்டை உடைசலான ரயில்பெட்டிகள்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் ஓடும் ரயில்களில் ஓட்டை, உடைசலான பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்து உள்ளது.தஞ்சாவூரை சேர்ந்த சுந்தர் விமலநாதன் என்பவர், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை டிஜிட்டல் மூலம் பரிசோதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில்,‛நாடு முழுவதும் டிஜிட்டல் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை '' எனக்கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை உடைசலான ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. வட மாநிலங்களுக்குத் தான் புதிய நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், பராமரிப்பில் தொடர்ந்து காட்டும் அலட்சியம் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கான சேவை படு மோசமாக உள்ளது . ரயிலை முறையாக பராமரியுங்கள் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதபதிகள், விசாரணையை ஜூலை 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

spr
ஜூன் 23, 2024 13:37

ரயில்வே துறையை நிர்வகிக்கும் மத்திய அரசு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நம் தென்னக ரயில்வேக்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் கூடப் தொடர்ந்து ஒரு சாமானிய பயணியாக இரு நாட்களுக்கு பயணம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நேற்று நெல்லையிலிருந்து சென்னைக்கு குளிர் சாதனப் பெட்டியில் வந்த அனுபவம் இப்படிச் சொல்ல வைக்கிறது பெர்த்துக்களுக்கு ஏறுவது இமயமலையில் ஏறுவது போல ஒரு சவாலான செயலே பிடிக்க சரியான வசதி இல்லை இதனை வடிவமைத்து உருவாக்கியவரை தூக்கில் போட வேண்டும் 82 வயதுப் பெண்மணிக்கு மேல் பெர்த் கொடுத்த நிர்வாகத்தை எப்படி பாராட்டுவைத்து? திட்டங்கள் போடும் அமைச்சர்கள் தாங்களே அதன் செயல்பாட்டையும் கண்டறிய வேண்டும்


venugopal s
ஜூன் 23, 2024 07:26

டிக்கெட் வாங்கி முறையாகப் பயணம் செய்வோருக்கு மத்திய பாஜக அரசு கொடுக்கும் பரிசு இது!


ராம்
ஜூன் 23, 2024 13:02

இந்த வந்துட்டார் 200ஊபீஸ் கான்கிராஸ் ஆட்சியிலி்ருந்து இப்படிதான் நடக்கின்றது அந்த கருத்தையும் சொல்லு சேத்து,,தென்னகத்தில் இப்படித்தான் இங்கே 40ம் தண்டம் தான்…தற்பொழுது 10வருட மோடி ஆட்சியில் தமிழகம் முழுவதும் ரயில்வே பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டு


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2024 06:12

தவறாக அதிருப்தி எழுப்பி உள்ளனர், தென்னக அதிகாரிகளில் பலர் மல நாட்டை சேர்ந்தவர்கள், அங்கே போகும் தென்னக ரயில்வேயின் ரயில்களுக்கு எல்லாம் புது பெட்டிகள் மின்னி கொண்டு செல்வதை பார்க்கவில்லை போலும்


Kasimani Baskaran
ஜூன் 22, 2024 23:14

மாடல் அரசின் போக்குவரத்துத்துறை பராமரிக்கும் பேருந்துகளில் ஒரு முறை நீதிபதிகள் பயணம் செய்து பயண அனுபவத்தை கட்டுரையாக எழுதினால் நன்றாக இருக்கும்.


தென்னவன்
ஜூன் 22, 2024 20:53

வடக்ஸ் வளருது. தெக்ஸ் தேயுது.


Suresh Kesavan
ஜூன் 22, 2024 20:40

ரயில்வே நிர்வாகத்தினால் தமிழகம் எப்போதும் இந்த விஷயத்தில் வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. வடக்கில் ஓடி தேய்ந்த வண்டிகளே இங்கு ஓடிக்கொண்டிருக்கும்...


Amar Akbar Antony
ஜூன் 22, 2024 20:34

கணம் நீதியரசர் அவர்களே உங்கள் கவனத்திற்கு ஓடிக்கொண்டிருக்கின்ற தமிழக அரசு பேருந்துகள் சக்கரம் கழன்று சாலையில் ஓடுகிறது பயணிகளின் இருக்கைகள் அப்படியே பேருந்தை விட்டு கீழே விழுகிறது ஏறும் படிகள் இறங்கும் படிகள் உடைந்து விழுகிறது மழை நீர் எப்போதும் உள்ளே விழுகிறது மன்னிக்கவும் உள்ளே மழை பெய்கிறது ஆங் பேருந்து சுத்தமாகவே இருப்பதில்லை அங்கங்கே சிலந்தி வலைகளும் சமயங்களில் கரப்பான் பூச்சிகளும் அனுதினம் காணலாம் இவை எல்லாம் தாழ்தள பேருந்தில் காணமுடியும் தயவுசெய்து அரசிடம் அறிவுறுத்தவும்


ராம்
ஜூன் 23, 2024 13:04

இதெல்லாம் நம் 200வேணுக்கு கண்ணில் தெரியாது…கள்ளகுறிச்சி சம்பவம் பற்றி எந்த பதிவும் போடமாட்டா??


sankaranarayanan
ஜூன் 22, 2024 20:20

டிக்கட்டே வாங்காமல் திருவாரூரிலிருந்து சென்னை குடியேறியவர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் உள்ளனர் ஆட்சியாளர்களே இவர்களே இப்படி செய்யும்போது பாமர மக்களை குறை சொல்ளாதீர்கள் நிர்வாகத்தையும் குறை சொல்லாதீர்கள் ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு


சத்திய சாயி
ஜூன் 22, 2024 19:17

இந்த வசதி போதும்


C. Sorna Rajeswari
ஜூன் 22, 2024 19:12

ஐயா, அப்படியே நம்ம ஊரு பஸ்ல உள்ள ஓட்டை உடைசல்கள் பற்றியும் கவலைப்படுங்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி