உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; பண்டிகை கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a1bzm32n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் திட்டம் இந்தாண்டே அமல்படுத்தப்படும். பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து செப்டம்பரில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும். பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும் என அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

காவலர்களுக்கான அறிவிப்பு

முதல்வர் அறிவித்ததாவது; பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. காவலர் சேமநல நிதி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சட்ட முன்வடிவு

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலையின் வேந்தராக முதல்வர் இருப்பார். இந்தப் பல்கலையின் கீழ் 36 கல்லூரிகள் இயங்கும், எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

என்றும் இந்தியன்
ஏப் 28, 2025 17:17

சொல்லிய எல்லா கருமத்தையும் நன்றாகப்படியுங்கள்??? முன்பணம் அதாவது கடனாக முன்னால் கொடுக்கும் பணம்???பிரீயாக அல்ல


Yes your honor
ஏப் 28, 2025 15:36

நான்கு வருடங்களாக வராத அக்கறை இன்னும் நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது என்றவுடன் வருகிறது. இன்னும் பலப்பல அறிக்கைகள் 110வது விதியின் கீழ் 1,110வது விதியின் கீழ், 11,110வது விதியின் கீழ் எல்லாம் வரும். பாலாறும் தேனாறும் ஓடப் போகிறது, எலக்ஷன் முடிந்தபிறகு கரண்ட் பில் தொகை ஏறிவிடும், பால் விலை ஏறிவிடும், விட்டுவரி ஏறிவிடும், 30,000 கோடிகளை கொள்ளையடித்து எங்கு வைப்பது என்ன செய்வது என்று தெரியாமல் மந்திரியின் இலாகாவை மாற்றிவிடுவார்கள். இன்னுமா இந்த உருட்டல்களை மக்கள் நம்புகிறார்கள்.


Rajarajan
ஏப் 28, 2025 15:15

அப்புறம், விலைவாசி மற்றும் வரிகள் ஏறிவிட்டதுனு , தனியார் புலம்ப கூடாது. அடுத்த அதிர்ச்சி, எட்டாவது சம்பள கமிஷன்.


GKGK GK
ஏப் 28, 2025 13:26

​​ஐயா தங்களின் பாதம் பணிந்து வேண்டுகிறோம் பகுதி நேர ஆசிரியர்களின் பனி நிரந்தரம் செய்து பன்னிரெண்டாயிரம் குடும்பத்தில் விளக்கேற்றுங்கள்


murali daran
ஏப் 28, 2025 13:17

எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை 4 மாதத்தில் அடுத்த தேர்தலுக்கு கடைசி 4 மாதத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.


sethu
ஏப் 28, 2025 13:00

இப்போது சொன்ன எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது , கருணாநிதியின் பெயரில் மாட்டிக்காம திருடுவது எப்படினு சொல்லிக்கொடுப்பார்களா


R.MURALIKRISHNAN
ஏப் 28, 2025 12:50

அப்ப அப்பாவுக்கு பயம் வந்துட்டுது......


S,selva Arasu
ஏப் 28, 2025 12:36

சுடச்சுட செய்திகளை வழங்கும் தினமலரைப் பாராட்டி மகிழ்கிறேன்.


S.V.Srinivasan
ஏப் 28, 2025 12:27

அதென்ன எதுக்கெடுத்தாலும் ஆராய ஒரு குழு தண்ட செலவு.


S.V.Srinivasan
ஏப் 28, 2025 12:26

தேர்தல் வரும் பின்னே முக்யமந்திரியின் இலவச அறிவுப்பு வரும் முன்னே. ஆனா ஒன்னும் நடைமுறையாகாது. அரசு ஊழியர்களே உஷார்.