உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளையராஜா திரையிசை பயணத்தை கொண்டாட முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இளையராஜா திரையிசை பயணத்தை கொண்டாட முடிவு: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=02rtyntd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:லண்டனில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramaswamy Jayaraman
மார் 14, 2025 11:49

நாட்டிற்கு தேவையான முடிவு. அவர் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்தவர். அதனால் அரசு அவருக்கு அரசு செலவில் மக்களின் வரி பணத்தில் கொண்டாட படவேண்டும். பொற்கிழி வழங்கி மரியாதையை செய்யலாம். பாவம் அவர் வறுமையில் வாடுகிறார். நல்ல முடிவு.


தேவராஜன்
மார் 14, 2025 11:19

பச்சோந்தி வேலை திராவிஷங்களுக்குப் புதிதல்ல. இளையராஜா இவ்விஷ வலையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.


karthik
மார் 14, 2025 10:25

இளையஜாவிற்கு ராஜ்ய சபா பதவி குடுத்த பொது வாழ்த்தாத வாய்கள் இப்பொழுது வாழ்த்துவது இளையராஜாவை தமிழர் என்ற போர்வை போத்தி தமிழர்கள் ஓட்டுக்களை பெறுவதற்கான முயற்சி தானே தவிர வேற ஒன்றும் இல்லை.


Sankar SKCE
மார் 14, 2025 06:38

நாடே எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்.... இந்த டெங்கு தமிழ் துரோகி தத்தி இதை செய்வதில் வியப்பென்ன?


Mani . V
மார் 14, 2025 04:58

இசைஞானி இளையராஜாவை இப்படியும் அவமானப்படுத்த முடியுமா? இதை ஊழல் பேர்வழிகள் நடத்துவது மகா கேவலம்.


J.V. Iyer
மார் 14, 2025 04:27

கையாலாகாத ஒரு முதல்வர். தமிழகத்தில் என்ன அராஜகம் அவர் கட்சியால் நடந்தாலும் ஒன்றும் தெரியாதவர்போல நடிக்கும் முதல்வர்.. காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி தமிழகத்தை இருளகமாக மாற்றி இப்போது சுடுகாடாக மாற்றி இருக்கும் முதல்வர். கடைசி முறையாக ஆட்சிசெய்யும் கட்சியில் இருந்து கடைசி முதல்வர்.


மாலா
மார் 14, 2025 03:36

அந்தாளு சிக்காது M.P.பதவிக்கே சிக்கல இதுக்கு ?


Appa V
மார் 14, 2025 01:01

இவர்களின் குடும்ப சேனல்களில் சிம்பனி இசையை ஒளிபரப்பி மக்களை மகிழ செய்யலாம்


கோமாளி
மார் 13, 2025 23:16

பட்டியல் சாதி ஓட்டு கொஞ்சம் பார்சல்..


Shankar
மார் 13, 2025 23:14

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், தற்போது தமிழகத்தில் நிலவிவரும் திமுகவிற்கு எதிரான சம்பவங்களை மறைக்கத்தான் இதுபோன்ற செயல்களில் ஸ்டாலின் ஈடுபடுகிறாரோ என்று தோன்றுகிறது.


புதிய வீடியோ