உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.32,000 கோடியில் மின்சாரம் வாங்க முடிவு: உற்பத்தி செய்யலாமே: வல்லுனர்கள் கருத்து

ரூ.32,000 கோடியில் மின்சாரம் வாங்க முடிவு: உற்பத்தி செய்யலாமே: வல்லுனர்கள் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, 1,500 மெகா வாட் மின்சாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு, 24 மணி நேரமும் கொள்முதல் செய்வதற்கு மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது. இதனால் யூனிட்டிற்கு, 5 ரூபாய் என வைத்தாலும், 32,400 கோடி ரூபாய் செலவாகும். இந்த நிதியில் மின் வாரியம் சொந்தமாக, 10,800 மெகா வாட் திறனில் சூரியசக்தி, 4,600 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்கலாம். அவற்றில் இருந்து, 25 ஆண்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பெற முடியும். 16,000 மெகா வாட் தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாகவும், கோடைக் காலத்தில் அதை விட அதிகமாகவும் உள்ளது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு என ஒப்பந்தம் செய்து, மின்சாரம் வாங்கப்படுகிறது. அதன்படி தற்போது, 1,500 மெகா வாட் மின்சாரத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு ஆர்.டி.சி., அதாவது, 'ரவுண்ட் தி கிளாக்' எனப்படும், 24 மணி நேரமும் வாங்குவதற்கு, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. அதன்படி, 1 யூனிட் மின்சாரம், 5 ரூபாய்க்கு வாங்குவதாக வைத்து கொள்வோம். ஒரு நாளைக்கு, 24,000 யூனிட் கிடைக்கும். இதனால் ஒரு நாளைக்கு, 1,500 மெகா வாட்டிற்கு, 3.60 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட்டிற்கு, 5 ரூபாய் என வைத்தால் தினமும், 18 கோடி ரூபாய் செலவாகும். ஒரு மாதத்திற்கு, 540 கோடி ரூபாய் என, ஐந்து ஆண்டு களுக்கு கணக்கிட்டால், 32,400 கோடி ரூபாய் செலவாகும். இந்த நிதியில், மின் வாரியம் சொந்தமாக மின் நிலையங்களை அமைத்தால், 25 ஆண்டுகளுக்கு மேல் மின்சாரம் பெறலாம். இதை செய்யாமல், தனியாரிடம் மின்சாரம் வாங்கவே வாரியம் ஆர்வம் காட்டுகிறது. இதுகுறித்து, தமிழக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது: இந்தியா உட்பட உலகம் முழுதும் பசுமை மின்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு, மாவட்டந்தோறும் ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. ஒரு மெகா வாட் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால், நிலத்துக்கான செலவு தவிர்த்து, 3 கோடி ரூபாய் செலவாகும் . காற்றாலை மின்சாரம் ஒரு மெகா வாட் காற்றாலை மின் நிலையம் அமைக்க, 6 கோடி ரூபாய் செலவாகும். எனவே, 32,400 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கும் செலவில், 10,800 மெகா வாட் திறனில், சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கலாம்; 4,600 மெகா வாட் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கலாம். மேலும், மின் வாரியம் அமைக்கக்கூடிய மின் நிலையங்களால், அடுத்த 25 ஆண்டு களுக்கு தொடர்ந்து மின் சாரம் பெற முடியும்.எனவே, வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்குவதை தவிர்த்து, காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைப்பது, ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் மின் வாரியத்துக்கு, மிகப் பெரிய வரப்பிரசாதகமாக அமையும். பசுமை மின் நிலையங்கள் அமைக்க, வங்கிகள் மிக குறைந்த வட்டியில் கடன் வழங்க தயாராக உள்ளன. இதை கணக்கில் கொண்டு, மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குதை தவிர்த்து, மின் வாரியம் சொந்த நிறுவு திறனை அதிகரிக்க வேண்டும். இது, கடும் நிதி நெருக்கடியில் உள்ள மின் வாரியத்தின் நிதி நிலைமையை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ethiraj
ஆக 09, 2025 06:53

2500 four kw solar panel can be installed to LT consumers of TN which will solve deficit instantaneously


Raajanna
ஆக 07, 2025 22:25

கஜானாவை காலிசெய்யும் காலி கும்பல் அரசும் அதீஈகாரிகளும்.


Sundaresan S
ஆக 06, 2025 21:28

ஏங்க கமிஷன் கிடைக்குமா?


Thravisham
ஆக 05, 2025 16:19

மத்திய மின்சார துறை உடனே தலையிட வேண்டும்


vbs manian
ஆக 05, 2025 08:54

கடன் சுமையை அதிகரிப்பதே மாடல் சாதனை. இலவசங்களில் செலவிடும் பணத்தை சூரிய மின் ஒளி திட்டம் புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு செலவிடலாம். தமிழ் ஒன்பது மாதம் நல்ல வெய்யில். தரிசு நிலங்களில் நீர்நிலைகள் வீடு மாளிகை மேற்கூரைகளில் சோலார் பேனல் அமைத்து ஏராளமாக மின் உற்பத்தி செய்யலாம். சீனாவில் குளம் குட்டையை கூட விட்டு வைக்கவில்லை. இயற்கை வாரி வழங்குகிறது.


Sakshi
ஆக 05, 2025 08:13

எலாம் 10% கமிஷன் than


Kuppan
ஆக 05, 2025 06:49

செய்ய சொல்வது ஆளும் அரசியல்வாதி , செய்வது மட்டுமே மின்வாரிய அதிகாரிகள். இதற்கு மினிஸ்டர் வேற. வல்லுநர் கருத்து இவர்களின் காதுகளில் விழுமா?


raja
ஆக 05, 2025 06:31

மின்வாரியம் உற்பத்தி செய்தால் திருட்டு திராவிட கோவால் புர கள்ள ரயில் ஏறி வந்த விஞ்ஞானி கட்டுமர குடும்பம் புறங்கை நக்க முடியாதே..


Priyan Vadanad
ஆக 05, 2025 04:13

யாருய்யா இவரு? எனக்கு பசிக்குதில்லே. நான் சாப்பிட வேண்டாமா?


Mani . V
ஆக 05, 2025 03:56

மின்வாரியமே உற்பத்தி செய்யலாம்தான். ஆனால் அரசியல்வியாதிகள் ஆன நாங்கள் கொள்ளையடிக்க முடியாதே.


முக்கிய வீடியோ