உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊதிய ஒப்பந்தம் தள்ளிவைப்பு; அரசு பஸ் ஊழியர்கள் ஏமாற்றம்

ஊதிய ஒப்பந்தம் தள்ளிவைப்பு; அரசு பஸ் ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை : தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, நீதிமன்றம் உத்தரவுப்படி, முத்தரப்பு பேச்சு நடத்தப்பட்டது; அதில், உடன்பாடு ஏற்படவில்லை.இதற்கிடையே, லோக்சபா தேர்தல் வந்ததால், முத்தரப்பு பேச்சு தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும், சட்டசபை கூட்டம் துவங்கி நடந்து வருகிறது. போக்குவரத்து துறை மானிய கோரிகையின் போது, புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட குறித்த எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்னரே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தப்படும் என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. 2022 டிசம்பருக்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னும் ஓய்வு கால பலனும் அளிக்கவில்லை.எங்களது கோரிக்கையை ஏற்காமல், போக்குவரத்து துறை தாமதம் செய்வது, ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Svs Yaadum oore
ஜூன் 28, 2024 10:07

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்னரே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தப்படுமாம்.. எதை எதோடு முடிச்சு போடுவது? ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி முதிர்வு தொகைகூட குடுக்க வக்கில்லை.. இதை அரசு ஊழியர் மேலும் 75000 நபர்கள் தேர்வு, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் என்றால் வாயில் வடை சுடுவது ...


sundarsvpr
ஜூன் 28, 2024 09:16

ஊதிய உயர்வு கேட்பது நியாயம். காரணம் மக்கள் நலனுக்காக ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நிர்வாகம் ஊதிய உயர்வுகள் மற்றும் சலுகைகள் வழங்குகின்றன. வழங்கும் உதவிகள் அள்ளி கொடுத்ததாக மக்கள் நினைக்கிறார்கள். உண்மையாக இல்லை. விலைவாசியை ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையாய் ஒரு ரூபாய் கூடுதல் அல்லது குறைத்துதான் இருக்கும். இதனை போராட்டம் செய்பவர்கள் ஏன் கவனிப்பதில்லை


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 09:08

சிலை மணிமண்டபம் கட்டவே பட்ஜெட்டில் இடமில்லை. பென்ஷன் கொடுக்க வழியில்லை. ஆளுக்கு ஒரு பஸ்சை விற்று சாப்பிடுங்கன்னு ஆலோசனை வரும்.


ராம்
ஜூன் 28, 2024 08:14

இங்கே ஒருத்தர் உடனே பொங்குவாரே கோபால கோபால ஏனப்பா சாராய சாவுக்கு பத்து லட்சம் எங்கள் வரிபணம் தூக்கிகொடுக்கும் அசுரர்களே இப்ப வேலை செய்பவருக்கு கொடுக்க பணம் இல்லையா அய்யகோ இன்னாடா இந்த திராவிடமாடலுக்கு வந்த சோதனை... நிறைய அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் புலம்பும் ஓசை காதில் விழுகின்றது ரிடயர்மென்ட் ஆகும் வயதை தள்ளி வைத்து இன்னும் வண்டியை இயக்க சொல்கிறார் என்று...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ