உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் டில்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்

ஒரே நாளில் டில்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இன்று 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடக்கிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று(டிச.,09) டில்லியில் 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: வெடிகுண்டுகள் வெடிக்கும் போது பலருக்கு காயம் ஏற்படும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். 30 ஆயிரம் டாலர் கொடுத்தால் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யப்படும் மர்மநபர்கள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekar Jayaraman
டிச 09, 2024 11:54

எல்லாம் தேசவிரோதிகளின் கூட்டுசதி டெல்லி காவல் துறையை கைபற்ற சதி.


Barakat Ali
டிச 09, 2024 10:37

எவனும் பயப்படல ன்னு பிரியுது ....


Barakat Ali
டிச 09, 2024 10:36

டில்லி போலீசார் கூறியதாவது: வெடிகுண்டுகள் வெடிக்கும் போது பலருக்கு காயம் ஏற்படும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர் ...... அப்படியா ? பெரிய க்ளூ குடுத்துட்டாங்களே ? நீங்களும் இதை வெச்சே புடிச்சு வகுந்துருவீங்களே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை