மேலும் செய்திகள்
'மகளிருக்கு தி.மு.க.,வில் 50 சதவீத ஒதுக்கீடு'
10-Sep-2024
சென்னை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் அப்துல்கரீம், மாநில பொதுச்செயலர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர். பின், முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது:பார்லிமென்டில் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக, தி.மு.க., குரல் கொடுத்தது. அதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். வரும் பார்லிமென்ட் கூட்டத்திலும், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை வைத்தோம்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க, நீண்ட காலமாக கோரி வருகிறது. அதன்படி முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி உள்ளோம். பூரண மதுவிலக்கை தமிழக அரசு படிப்படியாக கொண்டு வர வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
10-Sep-2024