உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு பயணம் மகத்துவமானது: பிரதமர் மோடி பெருமிதம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு பயணம் மகத்துவமானது: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு பயணம் மகத்துவமானது. நாட்டிற்காக அந்த அமைப்பு பணியாற்றி வருகிறது எனக்குறிப்பிட்டார்.ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நன்னாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தை, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நிறுவினார். தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு உள்ளிட்ட பண்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக இருந்து, அதன் ஹிந்துத்துவ சித்தாந்தத்துடன் துவங்கப்பட்ட பா.ஜ.,வுக்கு மாறியவர் தான், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.

சிறப்பு நாணயம்

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் துவங்கி நடைபெற இருக்கின்றன. டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நேற்று (அக் 01) நடந்தது. இதில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

முக்கிய பங்கு

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுக்கால பயணம் முன்னோடியில்லாதது.100 ஆண்டு கால மகத்தான பயணம் தேசத்தின் வளர்ச்சியை கட்டியெழுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன் தான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., வலுவாக போரிட்டது. தேசத்தின் மீது அன்பு செலுத்துவதையே ஆர்.எஸ்.எஸ்., பெரிதும் விரும்புகிறது. பொய் வழக்குகளை சுமத்தியபோதும், அந்த இயக்கம் ஒருபோதும் துவண்டு போனதில்லை. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தடை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. அவற்றை எல்லாம் அதன் தலைவர்கள் பொறுத்துக் கொண்டனர். ஒவ்வொரு ஸ்வயம் சேவகரும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கை தான், 'எமர்ஜென்சி' காலத்திலும், இன்னல்களை எதிர்கொள்ள உத்வேகத்தையும், வலுவையும் அவர்களுக்கு கொடுத்தது.'ஒரே இந்தியா; மகத்தான இந்தியா' என்ற கொள்கை மீது, ஆர்.எஸ்.எஸ்., ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது.இது, தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வேராக கொண்டவன் தான்.வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. ஜாதி, மொழி, பிரிவினைவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், அவை தேசத்தின் ஆன்மாவை பலவீனமாக்கிவிடும்.

சவால்கள்

இன்றைய காலத்தில் நம் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு மீது நேரடியான தாக்குதல் நடத்தப்படுகின்றன. பிரிவினைவாத, பிராந்தியவாத சிந்தனை, ஜாதி, மொழி ரீதியிலான சண்டைகள் மற்றும் பிரிவினைகள் வெளியில் இருக்கும் தீய சக்திகளால் கட்டவிழ்க்கப்படுகின்றன. ஊடுருவல் விவகாரம் நம் தேசத்தின் பாதுகாப்புக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்துலாக உருவெடுத்து இருக்கிறது. விழிப்புணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால், அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். பொருளாதாரத்திற்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது, நம் ஒற்றுமையை உடைப்பதற்கான மிகப்பெரிய சதி. அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு, ஊடுருவல் பிரச்னை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தில் தான் தேசத்தின் ஆன்மா புதைந்து இருக்கிறது. இந்த சித்தாந்தம் உடைக்கப்பட்டால் தேசம் பலவீனமாகி விடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விழாவில், சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல்தலையை பிரதமர் வெளியிட்டார்.ரூ.100 மதிப்பு கொண்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில்,சிம்ம வாகனத்தில் வரத முத்திரையுடன் பாரத மாதா இருக்கும் படமும், அவரை ஆர்எஸ்எஸ் சேவகர்கள் மரியாதையுடன் வணங்குவது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நாணயத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா என்ற வாசகம் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும்,' அனைத்தும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே அனைத்தும் சொந்தம். என்னுடைய எதுவும் இல்லை' என பொருள்படும் ' Rashtriya Swaha, Idam Rashtraya, Idam Na Mama' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு துவங்கப்பட்ட 1925 மற்றும் தற்போதைய 2025ம் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறப்பு நாணயத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையிலும், '1963ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது நடந்த அணிவகுப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்ற புகைப்படம்' இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Svs Yaadum oore
அக் 03, 2025 08:03

இந்தியாவில் மீண்டும் ஒரு பிரிவினையை ஏற்படுத்தி மொகல்ஸ்தான் அல்லது கிரேட்டர் இஸ்லாமிக் பங்களா தேஷ் உருவாக்வும் முயற்சி 2013லேயே துவங்கி விட்டது. 294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் பங்களா தேஷ் நாட்டின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் 53 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் வாக்காளர்கள் முஸ்லீம்கள். இந்த 53 தொகுதிகளிலும் வாழ்கின்ற முஸ்லீம்களில் பெரும்பாலோனர் பங்களா தேஷ் நாட்டிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவியவர்கள். ...இவர்களுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுப்பது மம்தா மேடம் அரசு ....திருப்பூரில் மத சார்பின்மையாக இவர்களுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுப்பது விடியல் அரசு ..


Svs Yaadum oore
அக் 03, 2025 07:55

பல சாதிகளை, பெரும்பாலும் முஸ்லிம் சமூகங்களை, ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கும் தனது கொள்கையை ரத்து செய்த கல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மம்தா மேடம் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாம். 2024-ல் கொல்கத்தா நீதி மன்றம் 77 முஸ்லிம் சாதிகளின் OBC அந்தஸ்தை ரத்து செய்தது. இவற்றில் பல ஜாதிகள் இந்தியாவிலேயே கிடையாது ...இந்த ஜாதிகள் பங்களாதேஷில் உள்ளவை ....இந்த ஜாதிகள் எப்படி மம்தா மேடம் அரசு ஓ.பி.சி பட்டியலில் சேர்த்தது ??....


Svs Yaadum oore
அக் 03, 2025 07:39

2014 ல் சொன்னது என்ன, ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருங்கள் என்றார். இப்போது மன்மோகன் போல புலம்புகிறார் ,டோட்டலி வேஸ்ட் என்கிறார்கள்.. இந்த பங்களாதேஷி வருவது மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள்.. மேற்கு வங்காள எல்லை: 2,217 கிலோமீட்டர்கள் மேற்கு வங்காளத்தில் வேலி அமைக்கப்படாத பகுதிகள்: 963 கிலோமீட்டர்கள் கூச் பெஹாரின் வேலி இல்லாத எல்லை: 50 கிலோமீட்டர்கள்...இங்கு வேலி அமைக்க எல்லை பாதுகாப்பு படை பல முயற்சிகள் எடுத்து வருகிறது ...ஆனால் அங்குள்ள மாநில அரசு வாக்கு வங்கிக்காக நிலம் கொடுக்க மறுத்து வருகிறது ...இது பற்றிய வழக்கு கூட நீதி மன்றத்தில் உண்டு ..


பிரேம்ஜி
அக் 03, 2025 07:34

இந்த பத்து வருடங்களில் ஊழலை ஒழிக்க ஒரு துரும்பும் கிள்ளி போடவில்லை!


Samooga Neethi
அக் 02, 2025 04:51

சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் இடிப்பதை நமது நாட்டின் முக்கியமான எதிர் காட்சிகள் ஆதரிக்கின்றன. நமது நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை ஊடுருவல் காரர்கள் பறித்துக்கொள்கிறார்கள். திடடமிட்ட முயற்சிகளினால் நமது மக்கள் தொகை அதிகரிப்பதை விட பல மடங்கு அதிகமாக அவர்கள் மக்கள் தொகை பெருகுகிறது உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.


Kasimani Baskaran
அக் 02, 2025 04:10

ஒட்டுன்னிகள் போல உள்ளே வந்த கள்ளக்குடியேறிகளை விரட்டவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டு. வாக்குரிமை என்றால் சட்டபூர்வ குடிமக்கள் கூட துன்பப்பட வேண்டும்.


Iyer
அக் 01, 2025 23:42

6 கோடிக்கு மேல் பங்களாதேசிகளும், ரொஹிங்யாக்களும் இந்தியாவில் கள்ளத்தனமாக வசிக்கின்றனர். இவர்களில் நிறைய பேர் சமூக விரோதிகளாகவும் - மற்ற எல்லோரும் சமூக விரோதி குடும்பக்கட்சிகளுக்கு VOTE BANK ஆகவும் செயல்படுகின்றனர். 6 கோடி பேரையும் அடையாளம் கண்டு நாட்டில் இருந்து விரட்ட சுமார் 10 வருடங்கள் ஆகும். இதை ஒரு போர்க்கால நடவடிக்கையாக கையாண்டு அனைவரையும் விரட்டவேண்டும்.


Sudha
அக் 01, 2025 21:14

இதை அமெரிக்காவும், பிரிட்டனும் செய்து இந்தியாவை முன்னேற வழி செய்யட்டும்


R. SUKUMAR CHEZHIAN
அக் 01, 2025 21:06

சட்டவிரோத குடியேற்றதிற்கு இங்குள்ள சமூக விரோத கூட்டங்களும் துணை புரிகின்றனர் சட்டவிரோத குடியேறிகலால் நம் தேச ஒருமைப்பாடிற்கும் தேச பாதுகாப்புக்கும் மிகபெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும்.


MARUTHU PANDIAR
அக் 01, 2025 20:38

கேவலம் ஓட்டுக்காக கோடிக்கணக்கில் வங்கத்தில் கள்ளக் குடியேறிகளை நுழைத்து அவன் வஞ்சனை இல்லாமல் இனப்பெருக்கம் செய்து, அளவு பெரிதாகி அப்படியே அண்டை மாநிலங்களிலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறான். இந்த நாட்டு மக்களின் உழைப்பை, அளிக்கப்படும் சலுகைகள் மூலம் நம் பொருளாதாரத்தை உறிஞ்சி விழுங்கி ஏப்பம் வீட்டுக் கொண்டிருக்கிறான். வோட்டு வங்கி மாநிலங்களின் கடன் சுமை எகிறுவதில் கள்ளக்குடி யேறிகளின் பங்கு முக்கியம். அமெரிக்காவில் அது முடியுமா? அங்கும் மக்களால் தான் அரசு தேர்ந்தெடுக்கப்படுகிறது.