உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேயர் : சுயே., மனுக்கள் நிராகரிப்பு : 32 பேர் மனுக்கள் ஏற்பு

மேயர் : சுயே., மனுக்கள் நிராகரிப்பு : 32 பேர் மனுக்கள் ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி மேயருக்கு மூன்று சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேயருக்கு 39 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மனுக்களை சரிபார்க்கும் பணி, தேர்தல் அலுவலர் நடராஜன் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. அ.தி.மு.க., -தி.மு.க., உட்பட 11 கட்சிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டன. பட்டியலில் ஆண் (அழகுராஜா) பெயர் இருந்ததால் திருநங்கை வேட்பாளர் பாரதி கண்ணம்மா மனு 'ரிஜக்ட்' ஆனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஆரோக்கிய ஸ்டீபன், தே.மு.தி.க., மாற்று வேட்பாளர் பாண்டியின் வேட்பு மனுக்கள் 'ரிஜக்ட்' செய்யப்பட்டன. பகுஜன் சமாஜ் சார்பில் முதலில் வேட்புமனு செய்த தவமணி மனு ஏற்கப்பட்டது. அக்கட்சியின் உண்மையான வேட்பாளர் என நேற்று காலை 'பேக்ஸ்' வந்த சுந்தரமூர்த்தியின் மனுவில் சிக்கல் உள்ளது.பட்டியலில் போட்டோ மாறியுள்ளதால், இன்று காலை 11 மணி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. தவமணியை சுயேச்சை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் தேவையற்றதாக கருதியதால், இறுதியாக 32 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அக்.,3ல் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை