மேலும் செய்திகள்
பதிவுத்துறை இணையதளம் இன்று காலை வேலை செய்யாது
22-Jan-2026
சென்னை: பதிவுத்துறை இணையதளத்தில், 'ஸ்டார் 3.0 சாப்ட்வேர்' இணைக்கப்பட்ட பின்னும், 'சர்வர்' பிரச்னை தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 590 சார் - பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பத்திரப்பதிவுக்கான இணையதளத்தில், 'ஸ்டார் 2.0' மென்பொருளுக்கு பதிலாக, மேம்படுத்தப்பட்ட 'ஸ்டார் 3.0' மென்பொருள் உருவாக்கப்பட்டது. இந்த புதிய மென்பொருள் பயன்பாட்டை, ஜன., 22ல், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பத்திரங்களை காகிதமில்லா முறையில் பதிவு செய்ய, இதில் வசதி செய்யப்பட்டது. தற்போது, இந்த புதிய சாப்ட்வேர் இணைக்கப்பட்ட நிலையிலும், பதிவுத்துறை இணையதள சர்வரின் வேகம் அதிகரிக்கவில்லை. எப்போதும் போலவே இந்த சர்வர் இயங்குவதால், பத்திரப்பதிவு பணிகள் சுணங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில்,''பதிவுத்துறை இணையதளத்தில் பெரிய அளவிலான சாப்ட்வேர் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளின்போது பிரச்னை ஏற்படுவது வழக்கம். இருப்பினும், இது தொடர்பான விஷயத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பதிவாகும் பத்திரங்களின் எண்ணிக்கை குறையவில்லை,'' என்றார்.
22-Jan-2026