உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநீறை அழிப்பது புரட்சி இல்லை கவர்னர்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

திருநீறை அழிப்பது புரட்சி இல்லை கவர்னர்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில்அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சியை, மஹாராஷ்டிர மாநிலகவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வழிபட்டார். தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பாடலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது: முருகனையும், தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை முருக பக்தர்கள் மாநாடு உணர்த்துகிறது.தமிழ் மண்ணில் முருகப் பெருமானின் சக்தி தன்னிகரற்றது. வட இந்தியாவில் கார்த்திக்காகவும், தமிழ் மண்ணில் கந்தனாகவும் கொண்டாடப்படுகிறார். ஆனால் முருகனின் அறுபடை வீடு தமிழகத்தில் அமைந்துள்ளது. அதை மதுரையில் ஒன்றாக அமைத்தது பாராட்டுக்குறியது. தமிழகத்தில் ஆரம்ப காலம் முதல்ஆன்மிகமும் அரசியலும் கலந்து உள்ளது. ஆன்மிகம் இல்லை எனச் சொல்வதில் இருந்து தான் தி.மு.க., பிறந்துள்ளது. ஆன்மிகத்தை சொல்லி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. முருகனின் கந்த சஷ்டி கவசத்தை அவதுாறாக பேசிய போது தமிழர்கள் வீறு கொண்டு எழுந்தனர். முருகனை தேவையில்லாமல் யாரும் தொடக்கூடாது என்பதை இந்த மாநாடு பறைசாற்றுகிறது. முருகனை கும்பிட்டால் மதக் கலவரம் வந்து விடும் என்றால், இயேசு, அல்லாவை வணங்கினால் வராதா. அவரவர் தெய்வத்தை வழிபட அரசியல் சாசனம் வழிவகை தந்துள்ளது. இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது குறித்து அரசியல் சாசனம் எதுவும் கூறவில்லை. தமிழகத்தில் முருகனை எப்படி வேண்டுமானாலும் பேசுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது. திருநீறு வைப்பது வி.சி.தலைவர் திருமாவளவனை பொறுத்தவரை புரட்சி. திருநீறை அழிப்பது என்னை பொறுத்தவரை புரட்சி இல்லை.முருக பக்தர்களில் முதன்மையானவர் முத்துராமலிங்கம் தேவர். தேவரை யாரெல்லாம் உயர்வாக நினைக்கிறார்களோ அவர்கள் முருகனை வணங்குவர். இவ்வாறு கூறினார்.பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் ''ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் முருகன் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்' என்றார். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஜூன் 22, 2025 22:51

திருநீறு வைத்தால் தான் ஹிந்து என்று கூட நீங்கள்சொல்வீர்கள்,ஆனால் நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே?


Ramesh Sargam
ஜூன் 22, 2025 12:16

வெளிமாநில முருக பக்தர்கள் வரக்கூடாது என்று தடைவிதிக்க தமிழக அரசுக்கு உரிமையே இல்லை. தடை விதிப்பதால் திமுக இந்த முருக பக்தர்கள் மாநாட்டை கண்டு ரொம்பவே பயப்படுகிறது என்று நன்றாக புரிகிறது. அந்த பயம் வரும் காலங்களில் மிக அதிகமாகும்.


என்னத்த சொல்ல
ஜூன் 22, 2025 14:31

அப்படி ஒரு தடை இல்ல ராசா... புரளியை கிளப்பாதே...


முருகன்
ஜூன் 22, 2025 11:08

திருநீறை வைத்து அரசியல் செய்வது ஏன் அனைத்து கட்சி மக்களுக்கும் பொதுவான தமிழ் கடவுள் முருகனை வைத்து அரசியல் ஆதாயம் அடைய துடிப்பது ஏன்


ஆரூர் ரங்
ஜூன் 22, 2025 11:33

ரம்ஜான் விழாவை வைத்து அரசியல் செய்வது ஏன்? மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழலில் சிக்கியுள்ள பிஷப்பின் சர்ச் ஆண்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எதற்கு?.


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 11:00

கடவுள் இல்லை என்று காலித்தனம் செய்தவர்களின் ஆட்சியில் இந்துவிரோதமாக என்ன செய்தாலும் அவர்களின் ஆதரவு கிடைக்கும்.


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
ஜூன் 22, 2025 10:20

திரு நீறு தகுதியானவர்களின் நெற்றியை அலங்கரிக்கும், தகுதியற்ற பிறவிகளின்நெற்றியில் தங்காது.... திருநீறு என்பது மாபெரும் சக்தியை கொண்டது.


Chandru
ஜூன் 22, 2025 12:37

எஸ் பேய் பிசாசு எல்லாம் விபூதி க்கு பயப்படும். அதனை கண்டு அஞ்சி நடுங்கும்


அப்பாவி
ஜூன் 22, 2025 08:07

கெவுனராயிட்டாலே கெத்து வந்துரும்.


Sakthi,sivagangai
ஜூன் 22, 2025 08:29

அப்புசாமி ஒனக்கு பல்லு போனாலும் லொள்ளு போக மாட்டேங்குது...


பெரிய ராசு
ஜூன் 22, 2025 08:58

மூர்க்கண்ணாகிட்டவே தேசவிரோதமும் , குண்டுவைப்பதும் கொல்வதும் சகஜம் ..


நல்லதை நினைப்பேன்
ஜூன் 22, 2025 09:14

நம்மூர்ல ஒரு பஞ்சாயத்து க்வுன்சிலர் பதவிக்கு போட்டி இட்டாலே கெத்து வருதில்லையா அப்படித்தான.


சமீபத்திய செய்தி