உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்.சி.,யில் விடைத்தாள் திருத்த புதிய மென்பொருள் உருவாக்கம்

டி.என்.பி.எஸ்.சி.,யில் விடைத்தாள் திருத்த புதிய மென்பொருள் உருவாக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த, புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வுகளில், ஓ.எம்.ஆர்., தாளில் விடையளிக்கும் வகையில், முதல்நிலை தேர்வும், விரிவான விடையளிக்கும் வகையில் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது. இவற்றின் மதிப்பெண் திருத்தத்தில் முறைகேடுகள், குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.அவற்றை களையும் வகையில், விடைத்தாள் மதிப்பெண் திருத்தத்திற்கு புதிய மென்பொருளை பயன்படுத்த, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜி.ஐ.எஸ்., முறையில் இயங்கும் இந்த மென்பொருள், விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, விடைகளை தனியாக பிரித்து, திருத்தும் பேராசிரியர்களிடம் வழங்கும்.அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., வழங்கியுள்ள விடைகளுடன் ஒப்பிட்டு, மதிப்பெண் வழங்குவர்.இதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக மதிப்பெண் வழங்க, இந்த மென்பொருள் அனுமதிக்காது.பின், பாடவாரியாக மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, இறுதி மதிப்பெண் வழங்கப்படும். இந்த நடைமுறை விரைவில் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 24, 2024 05:20

நீட்டில் தவறுகள் வரலாம் - ஆனால் தமிழக அரசு நடத்தும் தேர்வில் எல்லாமே சரியாக இருக்கும். TNPSC மட்டும் கொஞ்சம் பிரச்சினை. சரியான, தகுதியுள்ளவர்களை மட்டும் தேர்வு செய்வார்கள் - மற்றதெல்லாம் ஆல் ஓகே. இதுக்கெல்லாம் மணியோ அல்லது வேறு பத்திரிக்கையாளர்களோ எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை