திருப்பரங்குன்றத்தில் போராடிய பக்தர்கள் கைது
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி,இந்தாண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். மலை செல்லும் பாதையில் ஏராளமானோர் குவிந்தனர்.ஆனால், முந்தைய திமுக அரசை போல் தவெகவும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. கடந்த ஆண்டுகளை போல் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பக்தர்களின் எதிர்ப்பு பொய்யானது.மலை உச்சிக்கு செல்லும் வாசலில் இருந்த பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். தவெக ஒழிக.. போலீசார் ஒழிக... என கோஷம் போட்டனர். சாலையில் அமர்ந்து போராடினர். தொடர்ந்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர்.இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.