உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: பக்தர்கள் கருத்து

 தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: பக்தர்கள் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: ''தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை,'' என திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பக்தர்கள் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள பழநி ஆண்டவர் கோயிலை சேர்ந்த பூர்வ குடி மக்கள் சார்பாக கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். எங்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் இன்னும் நான்கு மாதத்திற்கு பிறகு ஓட்டு கேட்டு எங்கள் முகத்தில் எப்படி முழிப்பார்கள் என்பதை பார்க்கலாம். தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை. உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் போலீசார், கலெக்டரால் தீபம் ஏற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க கேட்டு, போலீசார் அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று உண்ணாவிரதம் இருந்தோம். அப்படி இருந்தும் அரசு செவி சாய்க்கவில்லை. பூர்வ குடிகளாகிய நாங்கள் மலை உச்சியில் உள்ள சிவன் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். எங்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் தேர்தலில் பிரசாரத்திற்கு வந்தால் கருப்புக்கொடி காட்டி கண்டனத்தை தெரியப்படுத்துவோம். நாங்கள் கொடுக்கும் உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு எங்களுக்கு எதிராகவே நீதிமன்றம் சென்று தீபம் ஏற்றக்கூடாது என வாதிடும் வக்கீல்களுக்கு அரசு பணம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
டிச 25, 2025 17:29

அவர்கள் பணம் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்... அந்த பணமெல்லாம் மக்களின் வரிப்பணம் தான்..... பஸ் கட்டண உயர்வு..... பால் விலை உயர்வு..... மின்சார கட்டணம் உயர்வு..... சொத்து வரி உயர்வு..... அனைத்துக்கும் மேலாக டாஸ்மாக் சாராய கடைகள் மூலம் மக்களிடம் இருந்து வசூல் பண்ணிய பணமாக தான் இருக்கும்.... அதானால் அவர்கள் கொடுத்தாலும்.... ஓட்டு மட்டும் இந்துக்களுக்கு எதிரான கட்சிக்கு போட கூடாது.


Shankar Sarangan
டிச 25, 2025 14:22

இப்போ இப்படித்தான் பேசுவாங்க. தேர்தல் நேரத்துல இந்த திமுககாரனுங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு அவனுங்களுக்கே மறுபடியும் ஓட்டு போடுவாங்க. தமிழக ஹிந்துக்களை இந்த விஷயத்தில் நம்பவே கூடாது.


S.L.Narasimman
டிச 25, 2025 13:19

கோவிலுக்கு செல்பவர்கள் உண்டியலில் பணம் போடுவதை தவிர்க்க வேண்டும். அந்த பணத்தை ஆதரவற்ற சிறார்களுக்கான ஆசிரமத்திற்கு வழங்க வேண்டும். இதை சமயநெறி பெரியோர்கள் வலியுறுத்த வேண்டும்.


Chandru
டிச 25, 2025 13:02

மதுரை மக்களே சிந்தித்து செயல் படுவீர் . ஹிந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களை நிமிர்ந்து /ஏறெடுத்தும் கூட பார்க்காதீர்கள்


mohanamurugan
டிச 25, 2025 12:52

மத மோதலை உருவாக்குபவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை தமிழர்கள் கருத்து


Yaro Oruvan
டிச 25, 2025 12:46

இம்முறை நிச்சயம் திருட்டு டாஸ்மாக் கும்பலுக்கு பாடம் கற்பிக்கப்படும்.. சகோதர சகோதரிகளே அவர்கள் பணம் கொடுப்பார்கள்.. வாங்கிக்கொள்ளுங்கள் அது நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் .. அதனால் வாங்கிக்கொண்டு உங்கள் மனம்போல் வாக்களியுங்கள்.. என்ன வேண்டுமானாலும் உய்யலாம் கடைசியில் 2000 கொடுத்து ஜெயிக்கலாம் என நினைக்கின்றனர். வாங்கிக் கொள்வோம்.. அனால் வாக்களிப்போம் நாட்டுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு.. தீயமுக ஒரு விஷ செடி இல்லை விஷ காடு .. மொத்தமாக அழிக்க வேண்டும்.. தமிழகத்தில் மத மோதல்களை தவிர்க்க தீயமுக ஒழிக்கப்படவேண்டிய ஒரு கொடிய நச்சு இயக்கம் .. ஜைஹிந்


Barakat Ali
டிச 25, 2025 10:44

நடுநிலை பேசும் ஹிந்துக்களை இனி இவர்கள் நம்பமாட்டார்கள் ....


D Natarajan
டிச 25, 2025 10:43

தமிழக ஹிந்துக்கள் ஒன்றுபட்டு 2026 ல் , ஹிந்துவிரோத கட்சிகளை அடித்து விரட்ட வேண்டும். சரக்கு, 200 rs 2000 rs க்கு விலை போகக்கூடாது


பேசும் தமிழன்
டிச 25, 2025 10:28

திருப்பரங்குன்றம் மக்கள் மட்டுமல்ல. தமிழக இந்துக்கள் அத்தனை பேரும் முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்ற தடையாக இருக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு செய்ய வேண்டும்.


vbs manian
டிச 25, 2025 09:20

கழகம் மறக்க முடியாத அடி விழ வேண்டும். நோட்டாவுக்கு கீழே போக வேண்டும். செய்வீர்களா மதுரை பெருமக்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை