உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மஹா தீபம், கடந்த, 24ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 30லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். மஹா தீபம் வரும், 4ம் தேதி வரை, 11 நாட்கள் தொடர்ந்து எரியும். இவற்றை காண, நேற்று வார விடுமுறை என்பதால், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அவ்வாறு வருகை தந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய, கோவிலில், நீண்ட வரிசையில், 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசனத்தில், 7 மணி நேரமும், பொது தரிசனத்திற்கு, 8 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், போலீசார் மற்றும் அறநிலையத்துறையினர், அவர்களுக்கு வேண்டியவர்களை குறுக்கு வழியில் தரிசனம் செய்ய அனுமதித்ததால், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ