வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Nothing will happen Formality order for every year.
சென்னை: தமிழகம் முழுதும், 'ஆர்டர்லி'யாக, போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் காவலர்கள், உடனடியாக அவரவருக்கென பணியமர்த்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு திரும்ப வேண்டும் என, பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுதும் ஏராளமான காவலர்கள், ஆர்டர்லி முறையில், போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். இதனால், காவல் நிலையங்களில் போதுமான ஆட்கள் இல்லாமல் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இந்நிலையில், 'ஆர்டர்லி'யாக பணியாற்றி வரும் காவலர்கள் உடனடியாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு திரும்ப வேண்டும் என, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Nothing will happen Formality order for every year.