உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோ வழக்கில் எல்லா குழந்தைக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவு

போக்சோ வழக்கில் எல்லா குழந்தைக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவு

சென்னை: 'போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் எல்லா வழக்குகளிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய தேவை இல்லை' என, டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிரிவில், வழக்குப் பதிவு செய்யும் போது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யலாம். வன்கொடுமை செய்யப்படாமல், குழந்தை காயமடைந்து இருந்தால், அதன் தன்மை குறித்த அறிய, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மற்றபடி, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் எல்லா வழக்குகளிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது. அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால், இது போன்ற நடவடிக்கையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் போலீசாருக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை