| ADDED : பிப் 10, 2025 06:28 AM
சென்னை : அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை உண்டியலில் செலுத்த உத்தரவிட்டுள்ளதற்கு, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பணியை கோவில் மணியம் மற்றும் காவலர் கவனிக்க வேண்டும். உண்டியலில் பணத்தை செலுத்தாத அர்ச்சகர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இது ஒரு சர்வாதிகார செயல். அர்ச்சகர்கள் வயிற்றில் அடிக்கும் வன்செயல். இதே நிலை நீடித்தால், உண்டியலில் காசு போட மாட்டோம் என்ற போராட்டத்தை துவங்க வேண்டிய சூழல் உருவாகும். தட்டில் போடப்படும் காணிக்கையை தட்டிப் பறிப்பது தரங்கெட்ட செயல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.