உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் அர்லேக்கர் ஆய்வு செய்தாரா?

மதுரையில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் அர்லேக்கர் ஆய்வு செய்தாரா?

மதுரை: மதுரையில், நேற்று முன்தினம் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர், 'வைகை நதியை மீட்டெ டுக்க யாரும் முன்னெடுக்க வில்லை என்றால், லோக்பவன் தலைமை தாங்கி முன்னின்று நடத்தும்' என்று பேசியதை, 'இது த.வெ.க., அரசின் கையாலாகாத்தனம்' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்தது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கொதிப்படைந்த அமைச்சர் நிர்மல்குமார், 'லோக் பவனில் என்ன வேலை இருக்கிறதோ அதை செய்தால் மட்டும் போதும்' என, கவர்னரை விமர்சித்துஉள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u1hkt5tq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முயற்சி எடுக்கும்

மதுரையில் நேற்று முன்தினம் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர் பங்கேற்றார். இதற்காக விமான நிலையத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக வைகை கரையோரம் வந்தார். இதுகுறித்து, நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், 'நான் வந்து கொண்டிருக்கும் போது, 'இது வைகையாறு' என, என் உதவியாளர் காட்டினார். 'அதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஆறு உள்ளது; நீர் எங்கே? ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, நான் அவரிடம் சொன்னேன். 'மதுரை இளைஞர்கள் வைகையை சுத்தப்படுத்துவதை இலக்காக வைத்து முயற்சிக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் வந்தால், அந்த கரையில் நாகரீக வளர்ச்சி ஏற்படும். யாராவது அதற்கு முயற்சிக்க வேண்டும். 'இல்லை என்றால், 'லோக்பவன்' முயற்சி எடுக்கும். இதுவும் தேசப்பற்று தான். வைகையாறு மட்டுமல்ல, இளைஞர்கள் சக்தியால் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வரமுடியும்' என்றார். இதை தொடர்ந்து, அவர் சர்க்கியூட் ஹவுஸிற்கு சென்று ஓய்வெடுத்தார். அவரை மரியாதை நிமித்தமாக கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் சந்தித்தனர். ஆனால், கலெக்டரிடம் வைகையாறு சீரமைப்பது குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் கவர்னர் ஆய்வு நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதன் அடிப்படையில் அறிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, 'கவர்னரின் இந்த அசட்டு துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம். 'மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை தாரை வார்க்காமல், கவர்னர் ஆய்வு செய்யும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தார். இதனால், 'டென்ஷன்' ஆன த.வெ.க., தலைமை, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் இரவில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட செய்தது. அதில், 'மதுரை வந்த கவர்னரை, மரியாதை நிமித்தமாக கலெக்டர், கமிஷனர், எஸ்.பி., சந்தித்தனர்' என்று, விளக்கம் அளிக்கப்பட்டது.

தேவை இல்லாதது

இந்நிலையில், மதுரையில் நேற்று அமைச்சர் நிர்மல்குமாரிடம், கவர்னர் ஆய்வு குறித்து நிருபர்கள் கேட்டபோது, ''கவர்னர் மாநில நிர்வாகத்தில் தலையிடுவது தேவை இல்லாதது. லோக் பவனில் என்ன வேலை இருக்கிறதோ அதை செய்தால் மட்டும் போதும். ''வரும் காலங்களில் முதல்வர், அமைச்சர்களின் அனுமதியின்றி அதிகாரிகள் கவர்னரின் ஆய்வுக்கு செல்ல வேண்டியதில்லை,'' என, தெரிவித்தார்.

அமைச்சருக்கு தெரியாதா?

'கலெக்டர் உள்ளிட்டோருடன் கவர்னர் ஆலோசனை நடத்தவில்லை. அவர்கள் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தனர்' என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்தது அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை. ஏனெனில், நேற்று காலை தான் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். அடுத்ததாக கலெக்டர் அலுவலக கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அதிகாரிகளிடம் பேசி உறுதி செய்யாமல், பொத்தாம் பொதுவாக கவர்னரை அமைச்சர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திராவிட மாடல் அமைச்சரை போல..மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிர்மல் குமார், நடந்தது என்ன என்று உண்மையை ஆராயாமல், திராவிட மாடல் அமைச்சர்களைப் போல அவசரப்பட்டு கவர்னர் மீது குற்றம் சாட்டியது துரதிஷ்டவசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

JeevaKiran
ஜூலை 09, 2026 11:22

நிர்மல்குமார் போன்றவரை தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும்?


amuthan
ஜூலை 05, 2026 20:35

அப்படியே அந்த எய்ம்ஸ் நிலைமை என்ன என்று விசாரித்து சொல்லலாம்


Indian
ஜூலை 05, 2026 19:46

மதுரைக்கு எந்த வளர்ச்சி திட்டமும் , கொடுக்காதீங்க , மதுரையை அப்படியே விட்டுடுங்க


நாகா
ஜூலை 05, 2026 18:44

திருப்பரங்குன்றம் முருகனிடம் ஆரம்பித்து இப்போது புட்டுக்கு மண் சுமந்த அந்த மீனாட்சியின் சுந்தரேஸ்வரர் வரைக்கும் வந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் பிரமாண்டமான விழாவின் கதாநாயகியான வைகை வரை வந்து விட்டனர். பல வீணாக போன "கை" கள் பல "வை" த்ததால் ஓடிய வைகை பொலிவை இழந்து நின்றுவிட்டது. ஓடிய ஆற்றில் இருந்து துவங்கிய மனித நாகரிகம் இப்போது திராவிட தீயசக்திகளால் அழிந்து வருகிறது கண்கூடு. எதிலும் ஊழல் எப்போதும் லஞ்சம் இது தான் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. ஆற்று நாகரிகம் செழித்து சனாதன தர்மம் வளர்ந்து கோயில்கள் பல பெருகி உலகுக்கே முன்னுதூரணமாக இருந்த தமிழர் நாகரீகம் அந்நிய படையெடுப்பு அரசியல் கழிசடைகளால் பரிதாப நிலைக்கு ஆளாகி திணறிக் கொண்டு இருக்கிறது. கற்றவர் தம்மை கற்றவரே காமுறுவர் கலங்கி நிற்கிறது. அந்த அளவுக்கு தமிழை அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறது கற்றறியா ஏழைகள். இவர்களை மூடர்கள் என்பதா ? முரடர்கள் என்பதா ?


govind
ஜூலை 05, 2026 18:00

தவெக அரசின் ஸ்நேக்பாபுதான் இந்த நிர்மல் குமார். இவரின் துடுக்குத்தனத்துக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


VSMani
ஜூலை 05, 2026 17:10

நிர்மல் குமார் பேச்சு திராவிட மாடல் பேச்சு போலத்தான் உள்ளது. போக போக தவெக சாயம் போய் திராவிட மாடல்தான் தெரிகிறது. ஒரு ஆளுநர் ஒரு ஆற்றின் மேலுள்ள அக்கரையில் சொல்லி இருக்கிறார். இதை திராவிட மாடல் ஆட்சியும் நிர்மல் குமாரும் இப்படி அரசியல் ஆக்குவது சரி அல்ல.


Keshavan.J
ஜூலை 05, 2026 16:55

இந்த மந்திரியும் ஆதவ் அர்ஜுனாவும் ரொம்ப ஆதுப்பு எடுத்து பேசறானுக. விஜய் இவர்கள் ரெண்டு பேரையும் தட்டி வைக்கணும் இல்லை என்றால் தீய கட்சிக்கு நடந்தது போல நடக்கும். ஒரே கையொப்பத்தில், டி.வி.கே. அரசைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இந்த அமைச்சர் தனக்கு அதிக அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார். .


ஆரூர் ரங்
ஜூலை 05, 2026 13:04

ஆண்டுக்கு அதிகபட்சமாக மூன்று மாதங்கள் மட்டுமே அணையிலிருந்து நீர் கிடைக்கிறது. அதையும் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். அரசு மருத்துவமனை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலக்கப்படும் செய்திகள் வந்ததுண்டு. இதெல்லாம் வாரிசு அரசியல் கட்சிக்குத் தெரியாமலா இருக்கும்?.ஸ்டாலின் தி.மு.க அமைச்சரவையில் இரண்டு மதுரை எம்எல்ஏ க்கள் அமைச்சர்களாக இருந்து என்ன சாதித்தார்கள்? செல்லூர் ராஜூ? ஒரு குடிமகன் என்ற முறையில் குறைகூற ஆளுநர் தகுதியுடையவர்.


PalaniKuppuswamy
ஜூலை 05, 2026 10:04

அரசின் வேலைகளின் தரத்தை எந்த சாதாரண குடிமகனும் கேட்கலாம் , எல்லாரும் இந்நாட்டு மன்னர் , மக்களின் பிரதிநிதி மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் . ஆளுநர் - பதவியைய் தவிர்த்து ஒரு குடிமகனாக ஆய்வு செய்து மக்கள் நலம் சார்த்த கேள்வி தானே கேட்கிறார் , தவறு என்ன ?


முருகன்
ஜூலை 05, 2026 09:18

அடுத்த கட்சியை அழிக்கும் இந்த...... ஆட்சியில் கவர்னர் ஆய்வு செய்தால் என்ன தவறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை