உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதி டார்ச்சர் வழக்கில் அதிரடி! பெண் டி.ஐ.ஜி., சஸ்பெண்ட்!

கைதி டார்ச்சர் வழக்கில் அதிரடி! பெண் டி.ஐ.ஜி., சஸ்பெண்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி தமது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இது குறித்து கைதியின் தாயார் புகார் அளித்திருந்தார். அதில் தமது மகனை போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலையின் போது பணம், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டியதாகவும் கூறி இருந்தார்.இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், கைதி சித்ரவதை வழக்கில் நேற்று வரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த டி.ஐ.ஜி., ராஜலட்சமி அதிரடியாக இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரும் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர தயாள் வெளியிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Kumar
அக் 23, 2024 21:17

I am really happy to hear the news


Ramesh Kumar
அக் 23, 2024 21:15

Fantastic action


ponssasi
அக் 23, 2024 15:56

மேல் அதிகாரி சொன்னதை செய்த ஜெயிலர் ஏன் தாண்டிக்கப்பட்டார்?


Ramesh Sargam
அக் 23, 2024 12:55

சஸ்பெண்ட் ஒரு தண்டனை அல்ல. அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும். இப்பொழுது சஸ்பெண்ட் செய்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து, ஏன், ஆளும் கட்சியில் உள்ள ஒருவரை பிடித்து, அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து மீண்டும் வேறு ஏதாவது அரசியல் பணியில் சேருவார்கள்.


S.Bala
அக் 23, 2024 12:53

பேசாம அந்த அதிகாரியை கைதியின் வீட்டில் ஒரு நாள் வேலை செய்ய சொல்லலாமே


Ramar P P
அக் 23, 2024 12:23

ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல


vee srikanth
அக் 23, 2024 12:12

பாவங்க இவங்க - அரசாங்க பணியில் சம்பளம் கம்மிங்க - அதனால் தான் கைதிகளை / காவலர்களை வீட்டு வேலை உபயோக படுத்தினாங்க - அதனாலே வேலூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்க அனுமதி குடுங்க


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 23, 2024 12:06

இதற்கப்புறமா இந்த அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை என்ன எடுத்தீங்கன்னு எந்த பேப்பர்லயும் செய்தி வருவதில்லையே. நாளைக்கே சஸ்பென்ஷன் வாபஸ் ரகசியமா நடந்துடும். அந்த அதிகாரிங்க எல்லாம் வளம் கொழிக்கும் எடங்களுக்கு மாற்றலாகிப் போயிடுவாங்க அப்படீங்குறது மகா ஜனங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.


Anantharaman Srinivasan
அக் 23, 2024 11:28

என் வீட்டுக்கு வந்து வேலை செய்யட்டும்.


vee srikanth
அக் 23, 2024 12:12

கஷ்டமான வேலை குடுங்க


பல்லவி
அக் 23, 2024 11:06

கடாட்சம் செஞ்சு துவம்சம் செய்யும் அதிகாரி


புதிய வீடியோ