உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக தமிழர்களின் வரப்பிரசாதம் தினமலர்.காம் ; பிறந்தநாள் கொண்டாட்டம்

உலக தமிழர்களின் வரப்பிரசாதம் தினமலர்.காம் ; பிறந்தநாள் கொண்டாட்டம்

உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழக செய்திகளை கொண்டு சேர்ப்பதில் தமிழகத்தின் நம்பர் ஒன் இணையதளமாக விளங்கும் தினமலர்.காம் நேற்று (ஆக.29) கால் நூற்றாண்டை நிறைவு செய்து 26வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மாதம் தோறும் 12 கோடி பார்வைகளை கொண்டதாக தினமலர்.காம் உயர்ந்துள்ளது.தினமலர் நாளிதழ் படிக்க முடியவில்லையே, தமிழகத்தின் செய்திகள் தெரிவதில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு இணையதளம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வாழ்வோரும் விரும்பி பார்க்கும் இணையதளமாக மாறியது தினமலர்.காம்.. இன்டர்நெட் வசதி நாளுக்கு நாள் பெருக, பெருக, இணையதளம் மற்றும் தினமலர் ஆப் வாசகர்களின் எண்ணிக்கை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அபரிதமாக வளர்ந்து சென்றது. சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான பாலோயர்களை கவர முடிந்தது. இணையதளத்தில் விளையாட்டு, ஆன்மிகம், வண்ண, வண்ண படங்களுடன் சினிமா, நடிகர், நடிகைகள் கேலரி, நியாயமான விமர்சனம் , தொழில் பகுதிக்கென வர்த்தகம், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக கண்டம் வாரியாக உலக தமிழர் செய்திகள், அயல்நாடுகளில் உள்ள ஹிந்து கோயில்கள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழக விவரங்கள், வெளிநாடு செல்வோருக்கு சிறந்த வழிகாட்டியாக பல கட்டுரைகள், பிற மாநில செய்திகள், கல்விமலர், ஜோசியம், காலண்டர், வெளியே தெரியாத வித்தியாசமான மனிதர்களை வெளி உலகிற்கு காட்டும் நிஜக்கதை, பொக்கிஷம், சிந்தனைக்களம், வாசகர்கள் தங்களின் மனதில் எழும் தேசம் மற்றும் சமூக நலன் தொடர்பான விமர்சனங்களை கருத்துக்களாக பதிவு செய்ய வழிவகுத்து கொடுத்தது தினமலர் கமன்ட்ஸ் பகுதி .

ஆன்மிக மணம் கமழும்

ஆன்மிகம், பக்தி பரப்பும் விதமாக கோயிலுக்கென தனிப்பக்கம் இதில் பாடல்பெற்ற சிவத்தலங்கள் தலவரலாறு, வைணவத்தலங்கள் , 360 டிகிரி பார்வையில் நூற்றுக்கணக்கான கோயில்கள், இலக்கியம், அரசியல், கதை என 30 ஆயிரம் புத்தகங்களின் விவரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தினமலர் இணையதள டி.வி.,

தினமலர் இணையதள டி.வி.,யில் லைவ், நியூஸ் புல்லட்டின், பிரேக்கிங், எக்ஸ்பிரஸ் செய்திகள், ரீல்ஸ், ஷார்ட்ஸ், ஒருநிமிட செய்தி, ஸ்பெஷல் ஸ்டோரீஸ், மாவட்ட செய்திகள், செய்திசுருக்கம், நியூஸ் ரவுண்ட்அப், சிறப்பு விவாதம், ஆன்மிகம், இது போன்ற தலைப்புகளில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்டேட் செய்யப்படுகிறது.

சமூக வலைதளங்களில் .,

தினமலர் டெஸ்க்டாப், தினமலர் ஆப், ஐ பேப்பர், ஆடியோ வடிவில் செய்திகள் , பாட்காஸ்ட் (தமிழ் ஒலி செய்தி) , தினமலர்- ஐ பேப்பர், சமூக வளைதளங்களில் பல பரிமாணங்கள், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் சேனல், திரட்ஸ், வெப்ஸ்டோரீஸ், கார்ட்ஸ், என இன்றைய நவீன முன்னேற்றத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் தினமலரை பார்க்க முடிகிறது.என்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் பிறந்த நாள் காணும் தினமலர்.காம் இன்னும் சாதனைகள் பல தொடர வாசகர்களின் அன்பும், ஆதரவும் நல்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

பல்வேறு தளங்களில் தினமலர் செய்திகளை படிக்க வேண்டுமா?

தினமலர் இணையதளம்: www.dinamalar.comதினமலர் ஐ பேப்பர்: https://ipaper.dinamalar.com/கோயில்கள், ஆன்மிக செய்திகள்: https://temple.dinamalar.com/சினிமா செய்திகள்: https://cinema.dinamalar.com/விளையாட்டு செய்திகள்: https://www.dinamalar.com/sportsதொழில் மற்றும் வர்த்தகம்:https://www.dinamalar.com/news/businessஉலக தமிழருக்கான என்.ஆர்.ஐ செய்திகள்: https://www.dinamalar.com/world-news-nriபிறமாநில செய்திகள்: https://www.dinamalar.com/other-state-tamil-newsவெளிநாட்டு பல்கலைகழகங்கள்:https://www.dinamalar.com/world-news-nri-ta/united-states/universities-informationsஉலகளாவிய தமிழ்ச்சங்கங்கள் விவரம்:https://www.dinamalar.com/world-news-nri-ta/united-states/sankankalகல்விமலர்: https://www.dinamalar.com/news/kalvimalarவாரம்தோறும் வெளியாகும் சிறப்பு பக்கங்கள்:https://www.dinamalar.com/weeklyஇணைப்புமலர்கள்https://www.dinamalar.com/malarkalபுத்தகங்கள்: https://books.dinamalar.com/பேஸ்புக்: https://www.facebook.com/Dinamalardailyஎக்ஸ் (டுவிட்டர்): https://twitter.com/dinamalarwebயூடியூப்: https://www.youtube.com/dinamalardailyவாட்ஸ்ஆப் சேனல்: https://whatsapp.com/channel/0029VafOvP54NVih9kT69x3lகார்ட்ஸ்:https://www.dinamalar.com/photos/social-media-cardsத்ரெட்ஸ்: https://www.threads.net/dinamalardailyவீடியோ செய்திகள்: https://www.dinamalar.com/videosமாவட்ட வீடியோ செய்திகள்: https://www.youtube.com/channel/UCgSLB71exvogds0OuXBn4Gghttps://www.dinamalar.com/podcastடெலிகிராம்: https://specials.dinamalar.com/telegram/இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/dinamalardaily/கூகுள் நியூஸ்: https://news.google.com/publications/CAAqBwgKMJGZjwsw8qOhAw/sections/CAQqEAgAKgcICjCRmY8LMPKjoQMw5-CtBg?ceid=IN:en&oc=3மொபைல் ஆப்: https://play.google.com/store/apps/details?id=com.softcraft.dinamalarபிரீமியம் செய்திகள்: https://www.dinamalar.com/news/premium-news


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

sekar ng
செப் 03, 2025 07:02

செய்தி பசியாளர்களுக்கு நல்ல விழிப்புணர்வு உள்ள செய்திகளை வழங்கி வரும் உங்கள் உண்மை சேவைக்கு மிகவும் நன்றி


Barakat Ali
ஆக 30, 2025 16:53

வாழ்த்துக்கள் ......


Kalyanaraman
ஆக 30, 2025 08:15

தினமலர் இணையதளம் கால் நூற்றாண்டை கடந்ததில் மகிழ்ச்சி - பாராட்டுக்கள். தனது சீரிய கடமையில் இருந்து வழுவாமல் இருக்க பலமுறை ஆளும் அரசுகளின் அழுத்தங்களையும் மிரட்டல்களையும் கடந்து வருவது மிகப்பெரிய சாதனை. எல்லாம் வல்ல உமையம்மை ஈசன் தங்களின் பணியை மேலும் சிறப்பாக இளமைத் துடிப்புடன் தொடர அருள் புரிவானாக.


ديفيد رافائيل
ஆக 30, 2025 06:34

2011 ல் இருந்து தான் எனக்கு mobile phone and internet கிடைச்சது. அப்ப இருந்து இப்ப வரைக்கும் continue use பண்றேன். News paper வாங்குற செலவு எனக்கு மிச்சம். Thanks dinamalar website.


ديفيد رافائيل
ஆக 30, 2025 06:30

நான் 2011 ல் இருந்து dinamalar website use பண்றேன், இது மட்டும் தான் use பண்றேன். News paper வாங்குறதே இல்லை. ஒரு நாளைக்கு 18 தடவை dinamalar website பண்ணி புது புது news படிச்சு தெரிஞ்சுக்குவேன். Thanks dinamalar website


ديفيد رافائيل
ஆக 30, 2025 06:24

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


லிங்கம்,கோவை
ஆக 30, 2025 05:15

தேசப்பற்று மிக்க நாளிதழான தினமலர் 100 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய தேசபக்தியையும் நடுநிலையையும் காப்பாற்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


ராஜா
ஆக 30, 2025 04:32

திருநெல்வேலியில் ஆரம்பித்து திரும்பி பார்க்கும் திசையெல்லாம் வளர்ந்து வரும் பத்திரிக்கைக்கு வாழ்த்துக்கள்


Raghavan
ஆக 29, 2025 21:41

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் மக்கள் சேவை. வாழ்க பல்லாண்டு


அன்பு
ஆக 29, 2025 23:07

வாழ்க வாழ்கவே. வளர்க. தொடரட்டும் உங்கள் பணி.


Priyan Vadanad
ஆக 29, 2025 21:08

ஒருசில வாசகர்களின் காமெடி பதிவுகளுக்காகவும் தினமலர் விரும்பி மதிக்கப்படும்.


முக்கிய வீடியோ