உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர் கொடூர கொலை

சென்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர் கொடூர கொலை

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் அருகே, மப்பேடு ஆலப்பாக்கம் சாலையோரத்தில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சூர்யா என்பவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சூர்யா என்பவர் சிட்லபாக்கத்தை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். சில மாதம் முன், காதலித்த சிறுமியுடன் சூர்யா போலீஸ் ஸ்டேஷனில் அடைக்கலம் புகுந்தார். சிறுமிக்கு வயது குறைவானது என்ற காரணத்தினால், பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் இன்று (டிச., 31) தாம்பரம் அருகே மப்பேடு ஆலப்பாக்கம் சாலையோரத்தில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சூர்யா என்பவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைக்கு காரணமான குற்றவாளியை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி