மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் அச்சுறுத்தலாக மாறிய காட்டுத்தீ
24-Jan-2025
சென்னை; வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது பொதுமக்களை உஷார்படுத்த, எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளை, 1,000 இடங்களில் அமைக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் சில ஆண்டுகளாக, எதிர்பாராத வகையில் பல்வேறு இடங்களில் பேரிடர்கள் ஏற்படுகின்றன. எங்கு, எப்போது, எப்படி என்பதை அறிந்து, சம்பந்தப்பட்ட பகுதி மக்களை உஷார்படுத்துவதற்குள், பாதிப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.குறிப்பாக, கடந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. பொதுவாக இதுபோன்ற புயல்கள் கரையை கடந்த பின் வலுவிழந்து விடும். அந்த நம்பிக்கையில் அனைவரும் இருந்தனர். எச்சரிக்கை ஒலி
ஆனால், பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னும் வலு குறையாமல், ஒரே இடத்தில் நீடித்ததால், விழுப்புரம், கடலுார், திருவண்ணமலை மாவட்டங்களில் அதிக மழை கொட்டி தீர்த்தது. திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது, சம்பந்தப்பட்ட மக்களை காப்பாற்றி இருக்கக்கூடாதா என்று யோசிக்க தோன்றுகிறது. இதை கருத்தில் வைத்து, பேரிடர் எச்சரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிடும் அறிவிப்புகளை, மக்களுக்கு பல்வேறு வழிகளில் தெரிவிப்பதுடன், கூடுதலாக அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.வெளிநாடுகளில் உள்ளது போல, பேரிடர்கள் குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளை நம் நாட்டிலும் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கான பணிகளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையில், அதிக பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை பட்டியலிடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகளில், நீர்வரத்து அபாய எல்லையை கடக்கும் போது, மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும். அரசு ஒப்புதல்
மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, கடலில் கொந்தளிப்பு போன்ற சமயங்களிலும், மக்களுக்கு எச்சரிக்கை, அபாய ஒலி எழுப்பும் கருவிகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.தமிழகம் முழுதும், 1,000 இடங்களில் இதற்கான கருவிகளை 13.25 கோடி ரூபாய் செலவில் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கருவிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும், சில விநாடிகளில் அபாய எச்சரிக்கை சென்றடையும் வகையில் இக்கருவிகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
24-Jan-2025