வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சமூக நீதி பேசும் முதல்வர் அவர்களே, நீங்கள் இப்படி மாணவர்களை பிரித்து உணவுப்படி வழங்குவது சரியா? இதில் பிரதமருக்கு கடிதம் எல்லோரையும் மதிக்கவேண்டும் என்று.
சென்னை:பொது சமையலறை திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு, உணவு படியாக மாதம் 2,500 ரூபாயும், பிற மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும், 1,331 சமூக நீதி விடுதிகளில், 70,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். பார்சல் முறை இந்நிலையில், ஆதிதிராவிடர் நல விடுதிகளில், 'பொது சமையலறை' திட்டம், கடந்தாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, சென்னையில் உள்ள, 21 விடுதிகளுக்கு மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, மாணவர்களுக்கு சைதாப்பேட்டை மற்றும் வேப்பேரி விடுதிகளில் உணவு தயாரிக்கப்பட்டு, 'பார்சல்' முறையில் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு ஒப்பந்த நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்படும் உணவுக்கு, ஒரு மாணவருக்கு சென்னையில் உணவு கட்டணமாக முன்னர், 1,500 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே, மற்ற மாவட்டங்களில் உள்ள விடுதி மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து, விடுதி மாணவர்கள் கூறியதாவது: பொது சமையலறை திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள மாணவர்களுக்கு உணவு படியாக, மாதம் 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. போக்குவரத்து படியுடன் சேர்த்து, தற்போது ஒருவருக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. 'பயோமெட்ரிக்' ஆனால், மற்ற மாவட்டங்களில் உள்ள விடுதி மாணவர்களுக்கு, அதே, 1,500 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் தான் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் தங்கி படிக்கின்றனர். அவர்களை புறக்கணிக் கும் விதமாக, அரசு இப்படி பாரபட்சம் காட்டுகிறது. மேலும், மாவட்டங்களில் உள்ள விடுதிகளில், 'பயோமெட்ரிக்' அடிப்படையில், உணவு கட்டணத்தை வழங்குகின்றனர். அதாவது விடுதிகளில் உள்ள மாணவர்களில் எத்தனை பேர் வருகை புரிந்துள்ளனர் என்பது, கருவி வழியாக கணக்கிடப்பட்டு, அதற்கான கட்டணம் வழங்கப்படுகிறது. சென்னையில் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை. விடுதியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாதந்தோறும் உணவு கட்டணம் கணக்கிடுகின்றனர். விடுதிக்கு மாணவர்கள் வரவில்லை என்றாலும், அவர்களுக்கும் சேர்த்து கட்டணம் ஒதுக்கப் படுகிறது. சென்னையில் உள்ள நகர்ப்புற மாணவர்களுக்கு ஒரு கட்டணம், மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு கட்டணம் என்பது, அநீதியாக தான் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக நீதி பேசும் முதல்வர் அவர்களே, நீங்கள் இப்படி மாணவர்களை பிரித்து உணவுப்படி வழங்குவது சரியா? இதில் பிரதமருக்கு கடிதம் எல்லோரையும் மதிக்கவேண்டும் என்று.