உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு: உசிலம்பட்டி போலீஸ்காரர் அடித்துக்கொலை!

டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு: உசிலம்பட்டி போலீஸ்காரர் அடித்துக்கொலை!

உசிலம்பட்டி: டாஸ்மாக் மதுக்கடையில், மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் 40, உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wn24p9wn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறி வந்த முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார்.அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து போலீஸ்காரரை கல்லால் தாக்கி படுகொலை செய்தனர். அவருடன் இருந்த ராஜாராமையும் தாக்கியதால் படுகாயமடைந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

N Srinivasan
மார் 27, 2025 21:30

முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் மது அருந்தி இருக்கிறார். அந்த சமயத்தில் தகராறு. அதன் தொடர்ச்சியாகத் தான் கல் எறிதல் நடந்தது. மது போலீஸுக்கும் கேடு. இது தான் இந்த நிகழ்வின் சுருக்கம். மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை.


நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 21:12

மற்றுமொரு இளம் விதவையை உருவாக்கிய பெருமை டாஸ்மாக்கிற்கு


sridhar
மார் 27, 2025 21:11

வோட்டு போட்டவர்களை என்னவென்று சொல்ல . தமிழகத்துக்கு கேடு .


MARUTHU PANDIAR
மார் 27, 2025 21:00

சில நாட்கள் முன்பு பணகுடியில் அரசு டாக்டர் பணி நேரத்தில் போதை ஏற்றிக் கொண்டு சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அத்து மீறல், இப்போ போதை போலீசு காரரு கொலை . பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே .இவருக்கு ஒன்லி 40 வயதாம் . அப்புடீன்னா இவர் வீட்டில் ஒரு இளம் விதவை . ரொம்ப ரொம்ப நன்னா இருக்கே .அரசு அதிகாரிகள் ஒரு அரசு நிறுவனத்தின் கஸ்டமரா இருப்பது தப்பாங்கோ ஆபீசர்? அப்படீன்னு பேசிக்கறாங்க .


Siva Balan
மார் 27, 2025 20:39

இன்று போலிஸ்காரன் நாளை கலெக்டர் அடுத்து அமைச்சர்கள் துணை முதல்வர் என்று நீண்டாலும் மக்கள் கவலைப்படாமல் கடந்து போவார்காள்.


sridhar
மார் 27, 2025 21:09

கடைசியா சொன்னீங்களே அது நடந்தா மக்கள் ஆனந்தகூத்து ஆடுவார்கள் .


Vijay
மார் 27, 2025 20:31

திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.


Oru Indiyan
மார் 27, 2025 20:17

உண்மையில் வருத்தப்பட தேவையில்லை. 4 வருடங்களாக இப்படிப்பட்ட நிலை தான் உண்மை. ஈ பி எஸ் சொன்ன மாதிரி நாளை நாம் உயிரோடு இருப்போமா


சிட்டுக்குருவி
மார் 27, 2025 20:11

மதுவிற்கும் அரசு துறையையும் இந்த கொலைக்கு காரணமாக சேர்க்க வேண்டும். மதுவிற்பதும் கொலைக்கு தூண்டுதல்தானே.யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.


Ramesh Sargam
மார் 27, 2025 20:09

கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தினரை முதல்வர் அல்லது யாராவது திமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஏதாவது நிவாரணம் கொடுத்து சரிகட்டி விடுவார்கள். ஆனால் மதுவை மட்டும் ஒழிக்கவே மாட்டார்கள். பல பெண்களின் தாலி அறுந்தால்தான் கனிமொழி போன்றவர்களுக்கு மிக்க ஆனந்தம்.


தமிழ்வேள்
மார் 27, 2025 19:57

போலீசார் மது அடிமை/ பழக்கத்தில் விழுந்தால் அந்த துறை உருப்பட வழியே இல்லை...முதலில்மது,பிறகு மாது ... இறுதியில் தேச துரோகத்தில்தான் கொண்டு போய் நிறுத்தும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை