உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் கொடுப்பதில்லை சத்துணவு திட்டத்தில் அதிருப்தி

முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் கொடுப்பதில்லை சத்துணவு திட்டத்தில் அதிருப்தி

பொள்ளாச்சி: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப் பழம் அளிக்கப்படாததால் அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்கப்படுகிறது. வாரந்தோறும், குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு, சாப்பாடு மற்றும் சாம்பார், தக்காளி சாதம், புளி சாதம், சுண்டல் சாதம் அல்லது பாசிப்பயிறு சாதம் மற்றும் காய்கறி சாதம் வழங்கப்படுகிறது. அதனுடன் தினமும், முட்டை வழங்கப் படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது உருளைக்கிழங்கு மசால் வழங்க வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், முட்டை சாப்பிடாத மாணவர் களுக்கு மாற்று உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை. அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 60 லட்சத்திற்கும் அதிகப்படியான மாணவர்கள் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். அதில், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு புரதச்சத்தை சமன் செய்யும் வகையில், வாழைப்பழம் அல்லது உருளைக்கிழங்கு மசால் வழங்க வேண்டும். ஆனால், எந்த பள்ளி யிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் வழங்குவதில்லை. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு புரதச்சத்தை சமன் செய்யும் வகையில் உணவுப்பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

joe
ஆக 29, 2025 16:55

யூனியன் அலுவலக கமிஷனர்கள் என்னதான் வேலை பார்க்கிறாங்க .சத்துணவில் குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் .கலெக்டர் இது சம்பந்தமாக யூனியன் ஆபீஸ் அதிகாரிகளிடம் விசாரித்து சம்பந்தப்பட்ட ஊழலை அதன் காரணத்தை தெரிந்து உடனே நடவடிக்கை எடுக்கணும் .


joe
ஆக 29, 2025 16:38

முட்டை ஸ்டாக் வைத்துள்ள இடத்தில் யூனியன் அலுவலக ஊழியர்களே ஒவ்வொருவரும் வாரம் 10 முட்டைக்கு மேல் எடுத்து செல்கிறார்கள் .முட்டை கம்பெனிக்காரங்க 1000 முட்டைக்கு இலவச முட்டை என்று தருகிறார்கள் .அந்த முட்டைகளையும் யூனியன் அலுவலக ஊழியர்கள் எடுத்து செல்கிறார்கள் .இது சம்பந்தமாக தமிழ்நாட்டில் உள்ள எந்த யூனியன் கமிஷனரும் இதுவரை நடவடிக்கை எடுத்தது இல்லை .இதுதான் யூனியன் அலுவலக கமிஷனர்கள் யோக்கியதை. .இப்படித்தான் ஆரம்பத்திலிருந்தே சத்துணவு செயல் படுகிறது .இந்த செய்தி 100 க்கு 100 உண்மையான செய்தியே. சத்துணவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக தெரியும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை