உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்

பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்

சென்னை : தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து, வரும் 30, நவ., 3ம் தேதிகளில் காலை 8:05க்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 2:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் எழும்பூரில் இருந்து, வரும் 30, நவ., 3ம் தேதிகளில் மாலை 3:55க்கு புறப்பட்டு, இரவு 10:50 மணிக்கு பெங்களூரு செல்லும்.

நீட்டிப்பு

தாம்பரம் - ராமநாதபுரம் இடையே திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள், நவ., 2 முதல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன ராமநாதபுரம் - தாம்பரம் இடையே, செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள், நவ., 3 முதல் டிச., 1 வரையில் நீட்டித்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ