உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி இனிப்பு விற்பனை ரூ.5,000 கோடியாக அதிகரிக்கும்

தீபாவளி இனிப்பு விற்பனை ரூ.5,000 கோடியாக அதிகரிக்கும்

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள சிறியது, பெரியது என, அனைத்து இனிப்பு கடைகளிலும் இனிப்பு வகைகள் விற்பனை, 5,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.தீபாவளிக்கு வீடுகளில் இனிப்பு பலகாரம் செய்வதை தவிர்த்து, தற்போது கடைகளில் அதிகளவில் வாங்குகின்றனர். மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு, 'ஸ்வீட் பாக்ஸ்'கள் வழங்குகின்றன, இதனால், இரு தினங்களாக இனிப்பு மற்றும் கார வகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று தீபாவளி இனிப்பு பலகாரம் விற்பனை உச்ச அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தாண்டு இனிப்பு விற்பனை, 5,000 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய ஆண்டில், 4,000 கோடி ரூபாயாக இருந்தது.இது குறித்து, 'அடையாறு ஆனந்த பவன்' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா கூறியதாவது:இந்தாண்டு தீபாவளி இனிப்பு வகைகள் விற்பனை மிகச்சிறப்பாக உள்ளன. இதற்கு, மழை இல்லாதது, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம். வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு நேரில் வந்து, இனிப்பு வாங்குவது மட்டுமின்றி, 'ஆன்லைன்' வாயிலாகவும் வாங்குகின்றனர். மொத்த இனிப்பு விற்பனையில், ஆன்லைனின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. இதனால், அனைத்து கடைகளிலும் இனிப்பு வகைகள் விற்பனை அமோகமாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ