உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கத்தேர் இழுப்பில் கோஷம்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

தங்கத்தேர் இழுப்பில் கோஷம்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் தங்கத்தேர் இழுப்பதற்கு, 3,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறது.நேற்று முன்தினம் இரவு தங்கத்தேர் இழுப்பதற்காக, அ.தி.மு.க., மாநில மருத்துவ அணி இணைச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், திருவள்ளூர் தி.மு.க., நகர செயலர் ரவிச்சந்திரன் மனைவி செல்வி உட்பட, மொத்தம் ஐந்து பேர் கட்டணம் செலுத்தி இருந்தனர்.தேர் இழுக்கும் நிகழ்வில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாநில மகளிர் அணி செயலர் நடிகை காயத்ரி ரகுராம், தி.மு.க., நகர செயலர் ரவிச்சந்திரன் மனைவி செல்வி உட்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்தை கையில் வைத்துக் கொண்டு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஆக வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர்.இதற்கு தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வி மற்றும் சக உபயதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 'கோவிலில் அரசியல் செய்யக்கூடாது; பழனிசாமி முதல்வராக வேண்டும்' என, கோஷம் போடக்கூடாது என தகராறு செய்தனர். தகவல் அறிந்ததும், போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர். பின், தேர் இழுப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raja k
மே 29, 2025 08:36

கோயிலுக்கு போன சாமி கும்பிடனும், தங்கதேர் இழுக்குறேனு பேர்ல எடபாடி போட்டோவை வச்சுட்டு, எடபாடி வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்கனு கோசம்போட்டு கொடி பிடிக்க இது என்ன கட்சி ஆபீசா? திருத்தனி முருகன் கோவிலில், முருகனுக்கு அரோகரானு கோசம் போட வேண்டியதுதானே, இப்போதே இவங்க அட்ராசிட்டி தாங்க முடியவில்லை, இதுல 2026 ல தாமரை கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் தாங்கவே முடியாது, கோவில் எல்லாம் கட்சி ஆபீஸ் ஆயிரும், சாமி இல்லை னு சொல்லுர திமுக ஆட்சியில்தான் கோவில்கள் மிக அருமையாக பராமறிக்கப்படுகிறது, கோவில் சொத்துக்கள் மீட்கபடுகிறது, பைசாவாரியா கணக்கு வைக்கபடுகிறது, கோவில் வளர்ச்சி திட்டங்கள் பல நிறைவேற்ற படுகிறது, தாமரை ஆளும் மாநில கோவில்களின் நிலையை போய் பார்த்துவிட்டு வாருங்கள், காசை உண்டில போடாதேனு சொல்லுற கூட்டம்தானே, தட்டுல போடு அவா கட்டிட்டு போகட்டும்ங்கற பிற்போக்குதன அரசியல் தானே தொடர்ந்து செய்து வருகிறீர்கள்,


ஆரூர் ரங்
மே 29, 2025 09:30

நான்காண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட பெரிய ஆலயங்களின் நிதியிலிருந்து தலா நான்கைந்து சொகுசு கார்கள் வாங்கப்பட்டு அன்புத்தம்பிகளின் பயன்பாட்டில் உள்ளனவாம். என்னவோ போங்க. கழக மக்களின் சேவை மகேசன் சேவை?


S.L.Narasimman
மே 29, 2025 08:09

விடியல் குரூப்பகளுக்குதான் இந்து தெய்வங்கள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. கேலியும் கிண்ணலும் செய்யும் சென்மங்களுக்கு கோவிலில் என்ன வேலைன்னு அவங்களை அதிமுகாவினர் கேட்டு. இருக்கனும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 08:07

தமிழ் கடவுள் முருகனைப்பற்றியும் கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து திராவிட கழக பிரச்சாரம் செய்த திமுக கட்சியினருக்கு முருகன் கோவிலில் என்ன வேலை? எதை எப்படி ஆட்டைய போடுவது என்று நோட்டம் பார்க்க போனார்களா ?


vadivelu
மே 29, 2025 07:39

அப்படி ஒரு வாய்ப்பு வந்து விட்டால் சீப்பு ஐந்தில் போல ஒரு சத்தியம் செய்வீர்களா, செய்வீர்கள்.


subramanian
மே 29, 2025 07:39

திமுக வினர் கோவில் விஷயத்தில் எதுவும் செய்ய கூடாது. நாத்திகன் எதற்காக ஆத்திகம் பக்கம் போகவேண்டும்? கோவிலை விட்டு அரசியல் வெளியேறவேண்டும். ஊழல் செய்ய மட்டுமே இவர்கள் ஆதிக்க வேஷம் போடுகிறார்கள்.


Oviya Vijay
மே 29, 2025 06:53

பழனிச்சாமிக்காக பழனிக்கே காவடி எடுத்தாலும் இனி தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பேயில்லை.


Oviya Vijay
மே 29, 2025 06:51

இனி வாழ்நாளில் நடக்காத ஒன்றை நடத்திக் காட்டு என முருகனிடம் முறையிட்டால் பாவம் முருகன் என்ன செய்வார்... எடப்பாடியார் இனி முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு வாய்ப்பேயில்லாத போது கோவிலுக்கு தங்கத்தேர் இழுப்பதற்கான கட்டணம் ரூபாய் 3500 மட்டும் லாபம்...


vadivelu
மே 29, 2025 07:41

ஐந்து வருடங்களுக்கு மேல் மீண்டும் வாய்ப்பே கிடைத்தத்தில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த முறை வந்தால் எல்ல கோயில்களிலும் காவடி எடுப்பேன் என்று சொல்லுங்கள்.


முக்கிய வீடியோ