உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால் நானும் பதவி விலகுவேன்

 தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால் நானும் பதவி விலகுவேன்

திருச்சி: ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக நான் வெற்றி பெற்றதில் தி.மு.க.,வின் பங்கு மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் பங்கும் உள்ளது. எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும்படி என்னிடம் சொல்லும் தி.மு.க., தங்கள் கட்சி எம்.பி.,க்களையும் ராஜினாமா செய்ய சொன்னால், நானும் ராஜினாமா செய்ய தயார். தி.மு.க., மீண்டும் தேர்தலை சந்தித்தால், அதற்கு ஒரு எம்.பி., கூட கிடைக்காது. சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், ஒரு தொகுதிக்கு குறைந்தது 20 கோடி ரூபாயும், சில முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் 100 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது. ம.தி.மு.க., உள்பட, தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு, 234 தொகுதிகளிலும் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனாலும், வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க.,வில் இருந்து 150க்கும் மேற்பட்ட ஒன்றிய செயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் த.வெ.க.,வுக்கு வந்து உள்ளனர். பா.ஜ.,வை எதிர்க்க தி.மு.க.,வும் த.வெ.க.,வும் ஓரணியில் சேர வேண்டும் என்ற வி.சி.க., தலைவர் திருமாவளவனின் கருத்து ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Santhakumar Srinivasalu
ஜூலை 14, 2026 15:34

இந்த பார்லிமென்ட் முடியும் வரை இருந்தா பென்சன் மற்ற சலுகைகள் நீ உயிர் உள்ள வரை கிடைக்கும்?


சமீபத்திய செய்தி