உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - எம்.பி.,க்கள் நாளை கூட்டம்

தி.மு.க., - எம்.பி.,க்கள் நாளை கூட்டம்

சென்னை : தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், நாளை சென்னையில் நடக்கவுள்ளது. அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், நாளை, சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நடக்க உள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். 2025 - -26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ