உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., பேரணியில் கலந்துகொள்ள தி.மு.க., - அ தி.மு.க.,வுக்கு அழைப்பு

பா.ஜ., பேரணியில் கலந்துகொள்ள தி.மு.க., - அ தி.மு.க.,வுக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''சென்னையில் இன்று நடக்கும் மூவர்ண கொடி பேரணியில், தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சியினரும் தேசிய கொடி ஏந்தி பங்கேற்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., சார்பில் மராட்டிய சாம்ராஜ்யத்தின் பேரரசி ராணி அகல்யாபாய் ஹோல்கரின், 300வது பிறந்தநாள் விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில், நேற்று நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் விடுக்கப்பட்ட சவால். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நம் ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று, பயங்கரவாதிகள் முகாம், விமானப்படை தளத்தை அழித்தது. இதையொட்டி, சென்னை, எழும்பூர் சித்ரா தியேட்டர் அருகில், இன்று மூவர்ண கொடி பேரணி நடக்கிறது. இது, பா.ஜ., சார்பில் நடத்தப்படவில்லை. ஒற்றுமை பேரணி என்ற உணர்வுடன், தி.மு.க., -- அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும். அனைவரும் தேச ஒற்றுமையை காப்போம் என்று, பேரணியில் பங்கேற்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தொலைக்காட்சி விவாதத்தில் பேசும்போது, 'அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனுடன், அப்போதைய பிரதமர் இந்திரா உறுதியாக பேசியது போல், தற்போது பிரதமர் மோடி உறுதியாக பேசவில்லை' என்றார். யாரை கொண்டு வந்து யாரோடு ஒப்பிடுவது என தெரியாமல் பேசியுள்ளார். இது, வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், இதே மாதிரியான பேரணியை மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதிகள் வாரியாக நடத்தவும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். இதற்கான ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள கட்சியின் மாநில செயலர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சபேசன்
மே 14, 2025 18:05

இதை மோப்பம் புடிச்சுத்தானே ராணுவத்துக்கு ஆதரவா நேத்திக்கே பேரணி நடத்தினாரு. இ.பி.எஸ் சைக் கூட்டுப்பாருங்க. ஜலதோசம் வரமுடியாதுன்னு சொல்லுவாரு.


பாமரன்
மே 14, 2025 11:51

அட இருங்கப்பா எதுக்கு பேரணின்னு மறந்து போச்சு... பேசாமல் நாமும் வார்ரும் செட் பண்ணியிருக்கலாமோ.... நைனா மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்காப்லயாம்....


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மே 14, 2025 12:55

இது உனக்கு தேவையா ...


jaya
மே 14, 2025 11:26

பீட்டர் , பீட்டர் விடுவாரு. இந்திரா காந்தி மாநில அரசுகளை பந்தாடியது போல மோடி யும் பந்தாட வேண்டும் என்கிறாரா ?


Murugesan
மே 14, 2025 07:53

அண்ணாமலை கடினமாக உழைத்து பாஜகவை வளர்த்தார், மறுபடியும் அதை அழிக்க வந்த பீடைகள்


மோகனசுந்தரம்
மே 14, 2025 07:26

போங்கடா நீங்களும் உங்க கட்சியும். அண்ணாமலை இல்லாமல் உங்கள் கட்சியை நினைத்துப் பார்க்கவே எங்களால் முடியவில்லை


pmsamy
மே 14, 2025 07:23

பாருடா நைனார் நாகேந்திரன் எப்படி எல்லாம் அரசியல் பண்றான்


vivek
மே 14, 2025 10:54

போன வாரம் ஊர்வலம் போச்சு...எதுக்கு சொம்பு


R.RAMACHANDRAN
மே 14, 2025 07:01

இந்த நாட்டில் குற்றவாளிகள் எல்லாம் தேசப் பற்றுள்ளவர்கள் போல கபட நாடகமாடுகின்றனர்.


Mani . V
மே 14, 2025 06:57

பின்ன கூட்டணிக் கட்சியான திமுக வை அழைக்காமல் இருக்க முடியுமா?


Karthikeyan
மே 14, 2025 06:38

முதல்வர் தலைமையில் அரசு சார்பில் நடைபெற்ற பேரணியில் சங்கிகள் கலந்து கொள்ளவில்லையே ஏன்? இ ப்போது சங்கிகள் கட்சி நடத்தும் பேரணி எப்படி பொது பேரணியாகும்?


Iniyan
மே 14, 2025 06:26

அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தீரா?


துர்வேஷ் சகாதேவன்
மே 14, 2025 07:54

அவனே நொந்து போய் ருக்க்கான் எடப்பாடி சொல்லி நீக்கினார்கலே என்று தூக்கம் இருக்க தானே செய்யும் பாவம்


புதிய வீடியோ