உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக வரும் 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தேர்தல் கமிஷனை கண்டித்து வரும் 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V RAMASWAMY
நவ 06, 2025 18:51

மடியில் கனம், பயம் வயிற்றைக் கலக்குகிறது.


Govi
நவ 06, 2025 18:11

தேர்தல் கமிஷனுக்குனு தனியதிகாரிகள் இல்ல தமிழக அரசு ஊழியர்கள் தான் : அவர்கள் ......?


திகழ் ஓவியன்
நவ 06, 2025 18:05

இவனுங்க தீவிரமா எதிர்க்கிறத பார்த்தால், இந்த திருத்தம் மிகவும் நல்ல திட்டம்தான் போல தெரிகிறதே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை