மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
12 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
15 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
23 minutes ago
விழுப்புரம்:விழுப்புரத்தில் நேற்று இரவு தி.மு.க., சார்பில், லோக்சபா தொகுதி பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட தி.மு.க., துணை பொதுச்செயலர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மண்டலம் வாரியாக அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கான பிரசார ஏற்பாடு கூட்டம், இன்று துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜ., அரசின் தவறான கொள்கைகள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் குறைபாடுகள் பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லப்படும் வகையில், தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள், இளைஞரணியினர், உள்ளிட்டோருக்கு பயிற்சியளிக்கும் பிரசார கூட்டம் நடத்தப்படுகிறது.இக்கூட்டத்தில் கேட்டறிந்த தகவல்களை, கட்சியினர் மக்களிடம் பிரசாரம் செய்ய அறிவுறுத்தப்படும். வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம், 40 தொகுதியிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். அதற்கான பணிகளை மேற்கொள்வதே இக்கூட்டத்தின் நோக்கம்.இவ்வாறு பொன்முடி கூறினார்.
12 minutes ago
15 minutes ago
23 minutes ago