உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதம் ரூ.16 லட்சம் மாமூல் வசூலிக்கும் தி.மு.க., புள்ளி!

மாதம் ரூ.16 லட்சம் மாமூல் வசூலிக்கும் தி.மு.க., புள்ளி!

''மறைந்த அரசியல் கட்சி தலைவரின் வாரிசுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவி வழங்கக் கூடாதுன்னு, கவர்னருக்கு புகார் அனுப்பி வச்சிருக்காளாம் ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியுடன் வந்தமர்ந்தார் குப்பண்ணா.''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மறைந்த முன்னாள் தலைவரின் வாரிசு ஒருத்தர், சென்னை பல்கலை., பதிவாளரா வேலை பார்த்து, 'ரிட்டையர்' ஆகிட்டார்... அவர், 'ரிட்டையர்' ஆகறச்சே, நிர்வாக ரீதியா சில பிரச்னைகளில் மாட்டினுட்டார்...

''இப்ப, சென்னையில தனியார் கல்லுாரியில் வேலை பார்த்துண்டு இருக்கற அவர், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக தீவிரமா முயற்சி செஞ்சுண்டு இருக்கார் ஓய்...''சமீபத்துல, மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, உத்தப்பநாயக்கனுாரில் வசிக்கிற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை தாக்கி, மரங்களை வெட்டி வீசியதா இவர் மேல புகார் வந்துடுத்து... போலீஸ்ல வழக்கும் பதிவு செஞ்சுட்டா ஓய்...''இதனால, 'இப்படிப்பட்ட வாரிசுக்கு எப்படி டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவி கொடுப்பேள்'னு கேட்டு, தலைமை ஆசிரியை தரப்புல இருந்து, கவர்னருக்கே நேரடியா புகார் அனுப்பி வச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''கட்சிக்காரங்க செய்த வேலையை பார்த்து அமைச்சர், 'டென்ஷன்' ஆகிட்டாரு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''அப்படி என்ன ஓய் செஞ்சுட்டா...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில, சமீபத்துல அரசு விழா நடந்துச்சு... மாணவியருக்கு இலவச சைக்கிள்வழங்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போயிருந்தாரு வே...''அப்ப, பள்ளி வளாகத்தில் தி.மு.க.,வின் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப்படத்தை அலங்கரிச்சு தி.மு.க.,வினர் வச்சிருந்தாவ...''இதை பார்த்து, 'டென்ஷன்' ஆன அமைச்சர், 'பொது இடத்தில் இதுபோல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தலாமா'ன்னு நிர்வாகிகளுக்கு செமத்தியா டோஸ் விட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.''முதல்வர், அவர் மகன் பெயரை சொல்லி வசூல் வேட்டை நடக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''கோவை மாவட்ட டாஸ்மாக் கடைகளின் மாத விற்பனையில், 10 சதவீதம் ஆளுங்கட்சிக்கு மாமூலா வழங்கப்பட்டு வருதுங்க... இதை தவிர சிலர், தி.மு.க., இளைஞரணி மாநாடு நிதின்னு தனியா வசூல் வேட்டை நடத்திட்டு இருக்காங்க...''பொள்ளாச்சி நகர தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகி, 'டாஸ்மாக் கடை மற்றும் மதுபான கூடங்களில் இருந்து, மாசம் சொளையா, ௧ லட்சம் ரூபாய் கட்டாய மாமூல் வசூலிச்சுட்டு இருக்காருங்க... 'கப்பம் கட்டலைன்னா, கடை நடத்த முடியாது'ன்னு பகிரங்கமாவே மிரட்டுறாருங்க...''நகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையுடன் கூடிய மதுபான கூடத்தை நடத்துறவங்க, மாமூல் தராம முரண்டு பிடிச்சாங்க... அந்த பாருக்கு, நகராட்சி அதிகாரிகள், 'நோட்டீஸ்' கொடுத்துட்டாங்க...''இதை பார்த்து மிரண்டு போன மற்ற பார் உரிமையாளர்கள், ஆளுங்கட்சி பிரமுகருக்கு அடங்கி போயிட்டாங்க... இதனால, இவருக்கு மாசம், 16 லட்சம் ரூபாய் மாமூல் கொட்டுது... ரெண்டு தனியார் பார்ல, தி.மு.க., பிரமுகர் மறைமுக, 'பார்ட்னரும்' ஆகிட்டாருங்க...''அதுவும் இல்லாம, 'வசூல் பணம் முழுதையும், ஆளுங்கட்சி மேலிடத்துக்கு தான் கொடுக்குறேன்'னு சொல்லி, கட்சியினருக்கும் பங்கு தராம பதுக்கிட்டாருங்க...''இதனால குழம்பிப் போன ஆளுங்கட்சி நிர்வாகிகள், இந்த விவகாரத்தை கட்சி தலைமை வரை கொண்டு போயிருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Chinnathambi venka
ஜூன் 20, 2024 11:57

நீங்க நடத்துங்க நண்பரே.. தமிழக வோட்டுக்கு காசுவாங்கிற மக்குகளுக்கு மக்களுக்கு வேண்டும்..


santypoy
ஜன 08, 2024 09:27

அரசு நிறுவனம் தான் செய்யும் வியாபாரத்திற்கு Bill கொடுக்க வலியுறுத்த வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 09:46

பொறியியல் படித்து தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளேன் ....... பத்தாண்டுகள் அனுபவம் பெற்றும் என் சம்பளம் மாதம் ஒரு லட்சத்தைத் தாண்டல .......


Barakat Ali
ஜன 07, 2024 11:50

திமுகவில் சேர்ந்தீங்கன்னா பணராசி ......... பல தலைமுறைகளுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம் ....... டுமீலன்ஸ் ஓட்டுக்கள் உங்களுக்குத்தான் .......


Godyes
ஜன 07, 2024 09:16

ஒரு கட்சியை தேர்தலில் நிற்க அங்கீகரிக்கும் தேர்தல் ஆணையம் அக்கட்சிக்குள் சேர்பவர்களின் நடவடிக்கைகளை கடுமையாக கண்காணிப்பது முக்கியம். பொது சேவைக்கு துவங்கும் கட்சி இது போன்ற சுயநலத்தனமான வேலைகளை செய்தால் கட்சியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யவேண்டும். ஏற்கனவே தேர்தல்களில் நிற்க கட்சிகளை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் இது போன்ற கடுமையான வரன் முறைகளில் கட்சி நடத்த நிபந்தனைகளை பதிவு செய்திருக்கவேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 07, 2024 09:15

கோயம்புத்தூர்ல எங்க ஏரியாவுல காலை ஆறு மணிக்கே பார் தொறந்துடறாங்க. அப்புறம் கட்டிங் கொடுக்காம இருக்க முடியுங்களா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 07, 2024 09:06

வீட்டுச் செலவுக்கு நண்பர்கள் கொடுக்கும் ....


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 07, 2024 09:05

குடும்பச் செலவு, நடைபயணம் வகையறா செலவீனங்களுக்காக நண்பர்கள் கொடுக்குறாங்களோ ??


Barakat Ali
ஜன 07, 2024 11:51

அண்ணாமலை சட்டத்துக்குப் புறம்பாக பணம் பெற்றால் சட்டம் ஒழுங்க கவனிக்கிற காவல்துறை நடவடிக்கை எடுக்கலாமே ஆப்பீசர் ????


NicoleThomson
ஜன 07, 2024 17:11

சென்னை வெள்ளம் , தென்மாவட்ட வெள்ளம் எல்லாவற்றிலும் திருடிய கார்பொரேட் குடும்ப கழகத்திற்கு என்ன சொல்வீங்க


Kasimani Baskaran
ஜன 07, 2024 07:18

ஜனநாயகம் விற்பனைக்கு வந்தபின் இதெல்லாம் பெரிய பிரச்சினைகளே கிடையாது...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை