உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., போட்டி: விட்டுக் கொடுத்தது காங்.,

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., போட்டி: விட்டுக் கொடுத்தது காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. அங்கு தி.மு.க.,போட்டியிட உள்ளதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருந்த இளங்கோவன் மறைவை அடுத்து வரும் பிப்.,5ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.இந்நிலையில், இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி வந்தார்.இந்நிலையில், அங்கு தி.மு.க., போட்டியிட உள்ளதாக இன்று செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026 சட்டசபை தேர்தல் இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இண்டியா கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து தி.மு.க., வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நிக்கோல்தாம்சன்
ஜன 11, 2025 11:28

செல்வப்பெருந்தகை அடுத்த திருமாவா ?


Narasimhan
ஜன 11, 2025 11:22

மற்றவர்களுக்கு துரோகம் இழைத்தவர்களை தூக்கிப்பிடிப்பதில் திமுகவுக்கு இணை திமுக மட்டும்தான்


kulandai kannan
ஜன 11, 2025 10:57

பெருந்தகைக்கு பெருந்தொகை ஒதுக்கியிருப்பார்கள்.


பேசும் தமிழன்
ஜன 11, 2025 10:05

நாங்கள் தான் போட்டியிடுவோம் .....கூட்டணியில் இருப்பதாக இருந்தால் இரு ....இல்லையென்றால் போய்கிட்டே இரு என்று மிரட்டி இருப்பார்களே. ....இவனும் அறிவாலயத்தில் இருந்து துண்டை காணோம் ....துணியை காணோம் என்று ஓடி வந்து இருப்பான் ....பின்ன தனியாக நின்றால்....நோட்டா கூட தான் போட்டி போட வேண்டும்....கான் கிராஸ் கட்சியின் உண்மையான பலம் வெளியே தெரிந்து விடும் ...பிறகு இப்படி யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்ய முடியாது .


surya krishna
ஜன 11, 2025 09:01

Aanmai illatha adimai Khanki


தமிழ் மைந்தன்
ஜன 11, 2025 07:43

அப்போ இன்றுவரை தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை எம்பாதில் I அட்


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:32

தமிழக காங்கிரஸ் கட்சி அறிவாலயத்தில் இருந்து இயங்குவதை சிம்பாலிக்காக போட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது...


KR
ஜன 11, 2025 07:00

DMK would have just said that we will not fund electioneering of a Congress candidate. Congress would have magnanimously given up the seat on hearing this one condition alone.


Narasimhan
ஜன 11, 2025 11:24

Not just that. They probably dont want another wicket to go down


nagendhiran
ஜன 11, 2025 06:30

வேற வழியில்லாமல் கொடுத்திருக்கும்? இதில்"என்ன இழப்பு அவர்களுக்கு? தனியா"நின்றால் தேறாது? அதனால் இருக்கும்?


Bye Pass
ஜன 11, 2025 06:01

பட்டியில் அடைத்து நல்ல கவனிப்பு இருக்குமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை