உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கவுன்சிலர் கணவர் அராஜகம் நாகேந்திரன், நடிகை அம்பிகா கண்டனம்

தி.மு.க., கவுன்சிலர் கணவர் அராஜகம் நாகேந்திரன், நடிகை அம்பிகா கண்டனம்

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: கரூர் மாவட்டம், புகளூர் பகுதியில், நகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என புகார் எழுப்பிய ரவி என்பவரின் வீட்டிற்க்கு சென்று, அவர் மீது தாக்குதல் நடத்திய, புகளூர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவரும், தி.மு.க., மாவட்ட சிறு பான்மை அணியின் அமைப் பாளருமான நவாஸ்கானின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தங்கள் பகுதியின் அடிப்படை தேவை குறித்து, குரல் எழுப்பியவரின் வீட்டிற்கு, அடியாட்களுடன் சென்று, தாக்குதல் நடத்தும் அளவுக்கு, தி.மு.க.,வினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரை காப்பாற்ற துடிக்கும் ஏவல்துறை, தமிழகத்தின் பெருத்த அவமானம். அதிகாரத்தை பயன்படுத்தி, பொதுமக்களை அடிமைகளை போல் நடத்தும் அறிவாலயத்தின் ஆணவத்தை, ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? எனவே, அத்துமீறிய நவாஸ்கான் மீது, உடனடியாக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ரவி குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தி.மு.க., கவுன்சிலரின் கணவரால் தாக்கப்பட்ட ரவியை, நடிகை அம்பிகா நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் பேட்டியளித்த அவர். தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், ரவி மீது தாக்குதல் நடத்திய நவாஸ்கான் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !