கம்யூனிஸத்தை விமர்சித்த தி.மு.க., ராஜா *பதிலடியாக வெளியான பாடலால் சர்சை
பெரம்பலுார்:‛அந்த சாரு யாரு சொல்லவேணும் ராசா' என, நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க., துணை பொதுச்செயலருமான ராஜாவை விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி எழுதியுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லுாரியில்நடந்த நிகழ்ச்சியில், கம்யூனிசம் மற்றும் திராவிட கொள்கைள் குறித்து ராஜா பேசுகையில், 'சுயநலவாதிகள் ஆன தலைவர்களால் கம்யூனிசம் தோற்றது' என விமர்சனம் செய்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜாவையும், அவர் சார்ந்திருக்கும் தி.மு.க.,வையும் விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி வரத வசந்தராஜன் என்பவர் எழுதியுள்ள பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பாடல் வரிகள்: காளை மாட்டில் கறப்பவராம் ராசா ராசாகாம்புமில்லே மடியுமில்லே லேசா லேசாகாற்றலையில் காசுபார்த்த ராசா ராசாகம்யூனிசம் பழிக்க வந்த காமெடி பீசா!பெண்ணுரிமை பேசியதும் பழங்கதையாச்சு!மாணவிகள் வெளிவரவேபயப்படலாச்சு!உடன்பிறப்பு மாட்டுதுங்க பாலியல் கேசா அந்த சாரு யாரு சொல்லவேணும் ராசா ராசா! (காளை)பரம்பரைக்கு தலைமைப்பதவி பட்டா போட்டாச்சு பட்டியலு ஜாதிகளை ஒதுக்கி விட்டாச்சுசமூகநீதி பேசுகிற ராசா ராசா சந்ததிக்கே துாக்கலாமா கூசா கூசா!இப்படி அந்தப் பாடல் வரிகள் உள்ளன.
பதிலடி கொடுக்கவே பாடல்!
பாடலாசிரியர் வரத வசந்தராஜன் கூறுகையில், ''மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினராவும் உள்ளேன். சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, எம்.பி., ராஜா, கம்யூனிசம் தோற்றது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த பாடலை எழுதியுள்ளேன்,'' என்றார்.