உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., இரட்டை வேடம் அ.தி.மு.க., புகார்

தி.மு.க., இரட்டை வேடம் அ.தி.மு.க., புகார்

மதுரை: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை அரசியல் கட்சியினரிடம் வழங்கக்கூடாது,'' என, மதுரை அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார் ஆகியோர் கலெக்டர் பிரவீன் குமாரிடம் மனு அளித்தனர். பின், செல்லுார் ராஜு கூறுகையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை அ.தி.மு.க., முழு மனதாக வரவேற்கிறது. தொகுதியில் நடக்கும் தேர்தல் கூட்டங்களில், சிறப்பு திருத்தத்தை தி.மு.க., ஆதரிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. “பல மாதங்களுக்கு முன், தி.மு.க.,வினர், 'அரசு அதிகாரிகள்' என பொய்யாக கூறி மக்களிடம் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்டவற்றை பெற்றனர். ''இது தொடர்பாக ஏற்கனவே முந்தைய மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் புகார் அளித்தோம்; நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.ஐ.ஆரில் எந்த தவறும் நடக்காது என தற்போதைய கலெக்டர் கூறியுள்ளார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை