உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பெற்றது போலி வெற்றி: இ.பி.எஸ்.,

தி.மு.க., பெற்றது போலி வெற்றி: இ.பி.எஸ்.,

சென்னை: '' ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., கள்ள ஓட்டை போட்டு வெற்றி பெற்றதாகவும், அது போலி வெற்றி ,'' என தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் நடக்கும் கொலை சம்பவங்கள், வேதனை அளிக்கிறது. இது மோசமான ஆட்சி நடப்பதற்கு இதுவே சான்று. மக்கள் விரும்பி தேர்வு செய்ததால், டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினால், அது வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும். உண்மை செய்திகள் வெளிவந்தால், அ.தி.மு.க., ஆட்சி தானாக வரும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5fnuhfjh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'இண்டியா ' கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அனைவரும் அதிகாரம் நிறைந்தவர்களாக உள்ளனர். இதனால், விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லை. மக்கள் மீது அக்கறை இல்லை. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, ' இண்டியா' கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரஸ் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதை ஓட்டுகள் காட்டுகின்றன. இங்குள்ளவர்கள் தான் 'இண்டியா' கூட்டணி என தூக்கிப் பிடிக்கின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களில் இக்கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் சட்டசபை தேர்தலுக்கு பொருந்தாது என கூறிவிட்டனர். கூட்டணி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும். இனி இண்டியா கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் யாருமே இல்லை. அங்கு தி.மு.க., பெற்றதுபோலி வெற்றி. அ.தி.மு.க.,வினர் ஓட்டை தி.மு.க., நிர்வாகிகள் போட்டு விட்டனர்.கள்ள ஓட்டு மூலம் அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றோம் என மமதையில் இருக்கிறார்கள். 2026ல் நடக்கும் தேர்தலில் என்ன நிலைமை ஏற்படும் என பார்ப்போம்.சட்டசபை தேர்தலில் நிச்சயம் பலமான கூட்டணி அமையும். தேர்தலுக்கு 13 மாதம் உள்ளது. வலுவான கூட்டணி அமையும். கவலைப்பட வேண்டாம். இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு கூட்டணி உருப்பெறும்.எங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் ஒரே கொள்கை என ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்றால், தனித்தனி கட்சிகள் எதற்கு. எங்களை பொறுத்தவரை கூட்டணி வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைக்கப்படுவது கூட்டணி. தேர்தல் முடிந்ததும், ஒவ்வொரு கட்சியும் அவரவர் கொள்கைப்படி செயல்பட முடியும்.நெல்லையில் அல்வா சாப்பிட்டு மக்களுக்கு ஸ்டாலின் அல்வாவை கொடுத்துள்ளார். மிகப்பெரிய அல்வாவை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sundaran
பிப் 09, 2025 08:26

எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தேர்தலில் போட்டி இடாமல் ஒதுங்கி கொண்டு இதை சொல்ல உமக்கு வெட்கமாக இல்லையா . பயந்தான்கொள்ளி


GMM
பிப் 08, 2025 22:48

எடப்பாடி நம்பும் அண்ணா திமுக ஓட்டை திமுக பெற்று வருகிறது. எடப்பாடி தனித்து நின்றால் சீமான் கதி தான் . ஊருடன் ஒத்து வாழ் என்பர். தனிமரம் தோப்பு ஆகாது. ஸ்டாலின் வெற்றியின் பின் புலம் எடப்பாடியின் தவறான ஆணவ முடிவு. எடப்பாடியை அண்ணா திமுகவில் இருந்து நீக்கி, புதியவரை உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். கட்சி சசி, தினகரன் ப. செல்வம் , எடப்பாடி மூலம் அழிந்து வருகிறது.


T.sthivinayagam
பிப் 08, 2025 22:35

2026ல் அதிமுக நாதக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்


spr
பிப் 08, 2025 20:43

இவருக்கோ இதர கட்சிகளுக்கோ கருத்து கூற அருகதையே இல்லை. குடியாட்சித் தத்துவத்தில் வாக்களிப்பது மக்கள் கடமையென்றால், தேர்தலில் போட்டியிடுவது அரசியல் கட்சி என தொடங்கிய பின் அவர்களுக்கான கடமை. வெற்றியோ தோல்வியோ ஏற்றுக் கொள்ள வேண்டும். அஇஅதிமுக போட்டியிலிட்டிருந்தால் திமுகவின் வாக்கு குறைந்திருக்கும் சட்டசபையில் ஒரு மசோதா சட்டமாகும் நிலையில் வெளிநடப்பு செய்வது எத்தனை முறைகேடான செயலோ அது போலவே தேர்தலில் போட்டியிட மறுப்பதும் ஆளும் கட்சிக்கு மறைமுகமாக கொடுக்கும் ஆதரவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பாத அனைத்துக் கட்சிகளையும் மக்கள் மாநில பொது தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 08, 2025 21:27

Spr கருத்து super


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:49

அப்படி பார்த்தால் அதிமுக ஆட்சியில் இருந்த போது... எந்த இடைதேர்தலில் திமுக போட்டியிட்டது..... அப்போ அவர்கள் என்ன காரணத்துக்காக போட்டியிடாமல் இருந்தார்கள் ???


முருகன்
பிப் 08, 2025 20:31

தேர்தலில் நிற்க தைரியம் இல்லாத இவர் பேசுவது வேடிக்கை


Padmanabhan
பிப் 08, 2025 20:27

you should contest election. Either win or loss


SP
பிப் 08, 2025 19:19

இவர் கட்சியை, போட்டியிட கூடாது என்று யாரும் தடுத்தார்களா?


V வைகுண்டேஸ்வரன்
பிப் 08, 2025 19:04

நீங்க தான் பரீட்சைக்கே வரலையே, அப்புறம். " கொஸ்டின் பேப்பர் சரியில்லை, அவன் காப்பி அடிச்சான், இவன் காப்பி அடிச்சான்" னு கூவலாமா?


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 08, 2025 19:03

நீங்க நிக்க வேண்டியது தானே.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 08, 2025 19:02

//எங்களை பொறுத்தவரை கூட்டணி வேறு. கொள்கை என்பது வேறு.// இ பி எஸ் -இதை எப்பவும் சொல்லணும். follow பண்ணனும். திமுக கூட்டணி யை விமர்சிக்கும் போதும் இதை சொல்லணும்.


புதிய வீடியோ