உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது திமுக

தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க எம்பி கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.அடுத்தாண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. இன்னும் சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவானது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொது மக்கள் நலன் அமைப்புகள் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த குழுவில் இடம்பெற்றுள்ளோர் விவரம் தலைமை: கனிமொழி* டி.கே.எஸ். இளங்கோவன்* அமைச்சர் கோவி . செழியன்* அமைச்சர் தியாகராஜன்* அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா* திமுக அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா* கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்*எழிலன் நாகநாதன்*கார்த்திகேய சிவசேனாபதி*தமிழரசி ரவிக்குமார்*முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம்*சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

kumarkv
டிச 18, 2025 16:51

சாவுமணி அடிக்கு குழு


S.V.Srinivasan
டிச 18, 2025 13:42

இந்தவாட்டி தேர்தல் அறிக்கையில் சாராயக்கடை விலக்கு இருக்குமா கனி அக்கா. 5 வருஷத்துல சாராயத்தால விதவைகள் அதிகமாகிட்டாங்களே.


S.V.Srinivasan
டிச 18, 2025 13:39

அண்ணன் தங்கை கை கோர்த்துக்கொண்டு போட்டோக்கு போஸ் கொடுக்கறது மட்டும்தான். ஆனா உள்ளுக்குள்ள புகைச்சல்.


Palanisamy T
டிச 18, 2025 10:49

தமிழர்களை பழித்தும் இழித்தும் பேசவந்த யாரிவர்கள் திமுகவினர் தீபத் திருநாளை கேவலப் படுத்தியும் விட்டார்கள். இன்று தீபத் தூணையும் பிரச்சனையாக்கி நம் நெஞ்சங்களை புண்படுத்தி விட்டார்கள். இவர்களுக்கு தமிழர்கள் வரலாறும் சரிவரத் தெரியவில்லை, தமிழகத்திற்கு நேற்றுவந்தவர்கள் இவர்கள். திராவிட வரலாற்றையும் கொஞ்சமும் விளங்கிக் கொள்ள வில்லை. நாடாளுமன்றத்தில் நான்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற நினைப்பு ஒருவேளை சீமான் அவர்கள் திமுகவைப் பற்றி சொன்னது உண்மை திராவிடர் கைகளில் தமிழர்கள் சிக்கிவிட்டனர். இவர்கள் தங்களை தமிழர்களாக இன்னும் எண்ணிக் கொள்ளவில்லை. இப்படித்தான் நாடாளுமன்றத்திலும் இவர்கள் இன்னும் உளறிக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு சைவ சமயத்திற்கும் மதங்களுக்கும் என்னவேறுபாடு என்னவித்தியாமென்று இன்னும் புரியவில்லை. ஹிந்துமதத்திற்கும் பிறமதங்களுக்கும் நிறைய வித்தியாசம் வெறுப்பாடுகளுண்டு. வெறும் மதங்களின் துணைக் கொண்டு நாம் எந்தக்காலத்திலும் இறைவனை கடுகளவும் புரிந்துக் கொள்ளமுடியாது, அணுகவும் முடியாது. முடிந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் நிறைய உளரிக் கொட்டலாம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நலன்கள் கருதி நல்ல மாற்றங்கள் விழிப்புணர்வுகள் ஏற்ப்பட நிறைய நல்ல தமிழர்களை தேர்வுச் செய்யுங்கள்.


கத்தரிக்காய் வியாபாரி
டிச 17, 2025 22:06

யாருடைய அண்டப்புளுகு அறிக்கையில் முதலில் வரும்னு ஆவலுடன் காத்திருக்கும் தமிழக மக்கள். உதாரணத்துக்கு ..நீட்டாத தேர்வுக்கு விதி விலக்கு ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து.


Venugopal,S
டிச 17, 2025 21:53

என்ன புதிய அறிக்கை...புதுசா எல்லா ஊரிலும் kattu மரத்திற்கு போனா, சிலை, ஈர வெங்காயத்திற்கு சிலை, எல்லா ஹிந்துக்களின் கோவில் கள் தற்கா வுக்கு சொந்தம் அப்டின்னு சேர்த்துக் கிளறி புது அறிக்கை...


D Natarajan
டிச 17, 2025 21:35

இப்படி இருந்தால் சந்தோசம் 1 குடி மகன்களுக்கு 5 பிராந்தி பாட்டில் மாதந்தோறும் இலவசம். 2 பெண்களுக்கு மாதம் 10000 rs 3 எல்லோருக்கும் பேருந்தில் இலவச பயணம். 4 விவசாயிகளுக்கு இலவச உரம் 10 மூட்டை , ஒரு ஏக்கருக்கு 5 அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயணம், அரசாங்க அளவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை 6 மின்சாரம் எல்லோருக்கும் இலவசம் 7 சொத்து வரி ரத்து. so on


சாந்தி ராஜன்
டிச 17, 2025 20:28

ஏமாற்று வேலைக்கு குழு தேவையா .


Ramesh Sargam
டிச 17, 2025 20:22

என்ன புது அறிக்கை? போனமுறை தயாரித்த அதே போலிவாக்குறுதிகளை, அதாவது பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, கூடவே இன்னும் புதுசா ஏதாவது பொய் புரட்டுக்களை சேர்த்து மக்களை ஏமாற்றவேண்டியதுதானே...? இதற்கு ஒரு குழு.


Field Marshal
டிச 17, 2025 19:16

வீட்டுக்கு ஒரு ATM தான் சிறந்த அறிவிப்பு


புதிய வீடியோ