உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றங்களை மூடி மறைக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை பாய்ச்சல்

குற்றங்களை மூடி மறைக்கும் தி.மு.க., அரசு; அண்ணாமலை பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் தி.மு.க., அரசு, பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை; திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், நான்கு வயது பெண் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பலியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ws1rccbq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் புகாரளித்த நிலையில், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் தி.மு.க., அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது. சென்னை பல்லாவரத்திலும், இது போலவே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் மூன்று உயிர்கள் பறிபோயின. அப்போதும் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்று கூறிய தி.மு.க., அரசு, அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டது. தற்போதும் அதே கதையை முன்வைக்கிறது. பொதுமக்கள் உயிர் என்ன உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா?பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் தி.மு.க., அரசு, பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

pmsamy
ஏப் 21, 2025 06:10

ஐயோ பாவம்


Kasimani Baskaran
ஏப் 21, 2025 04:09

திராவிட கூவம் ஊர் நடுவில் போடுமளவுக்கு சென்னையே இருக்கும் பொழுது இதெல்லாம் சாதாரண விஷயம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும் புள்ளிகள் தண்ணீர் வடிகட்டும் தொழில் செய்வதால் இது போல வேண்டும் என்றே சாக்கடை கலக்கக்கூட செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. திருச்சியில் கூவம் ஓடுவதாக கேள்விப்பட்டது கிடையாது.


சிட்டுக்குருவி
ஏப் 21, 2025 03:22

ஏன் அரசு பரிசோதனை முடிவுகளை வெளியிடவில்லை .தகவல் அறியும் சட்டம் என்ன ஆயிற்று .நீங்கள் பெற்று வெளியிடுங்கள் .உறையூர் நீரை எடுத்து நீங்கள் பரிசோதனைக்கு அனுப்பினால் உடனே அரசு முந்தி செய்யும். செய்யுங்கள் என்று சொல்வதைவிட அவர்கள் செய்வதை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் தானாகவே முன்வந்து செய்வார்கள். செய்து பாருங்கள் .குடிநீரை குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்து முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வெளியிடவேண்டும் .இது சட்டமாக்கப்படவேண்டும் .இது சுகாதார துறைமூலமோ அல்லது ஊரகத்துறை மூலமோ செய்யலாம் .இதை அரசு செய்வதை உறுதிப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் கடமையாக கருதவேண்டும்.


MARUTHU PANDIAR
ஏப் 20, 2025 21:37

சென்னையில் மட்டும் என்ன வாழுதாம்?


venugopal s
ஏப் 20, 2025 21:32

அறிக்கை அண்ணாமலை ஈரைப் பேனாக்கி,பேனைப் பெருமாள் ஆக்குபவர். ஆனால் பாவம்,தமிழக மக்கள் இவர் பேச்சை நம்புவதில்லை!


Kjp
ஏப் 20, 2025 22:49

மூன்று உயிர்கள் போனதைப் பற்றி கவலைப்படாமல் ஈவு இரக்கமற்ற கருத்து போடுவர்களைப் பற்றி என்ன சொல்வது. கழிவு நீர் தண்ணீரைக் குடித்து எத்தனை பேர் செத்தால் என்ன. தான் சார்ந்த கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் முட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செவ்வனே செய்திருக்கிறார் நாடு விளங்கிடும்.


Ramesh Sargam
ஏப் 20, 2025 19:13

முன்பெல்லாம் மூடி மறைத்தார்கள். இப்பொழுது அதுகூட இல்லை. வெளிப்படையாகவே செய்கிறார்கள்.


Padmasridharan
ஏப் 20, 2025 18:43

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் படிப்பதை சாமானிய மக்களுடன் ஒற்றுமை படுத்தி மொழிக்கொள்கை பேசும் கட்சிகளுக்கு. . குடிக்கும் தண்ணீரை பற்றி பேச தயங்குவதேன். .


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 20, 2025 18:22

தின அறிக்கை அண்ணாமலை மீண்டும், மீண்டுமா? எங்க நையினார் அண்ணன் டென்ஷன் ஆகப்போறார்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 20, 2025 18:55

அண்ணாமலை அறிக்கைக்கே கதிகலங்கும் விடியா அரசு ....இன்னும் நயினார் ஆரம்பித்தா சட்டசபையிலிருந்து சட்டையை கிழித்து கொண்டு வந்ததை போல தலையை பிடிச்சி கொண்டு ஓடிட போறாரு....!!!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 20, 2025 18:14

பாமரன், வேணுகோவாலு, ஓவியா, அப்பாவி, வைகுண்டு எல்லோரும் வரிசையில் வாருங்கள் விடியாத ஆட்சிக்கு முட்டு கொடுக்க.....


என்றும் இந்தியன்
ஏப் 20, 2025 18:53

இவ்வளவு தானா???? இன்னும் 18 ரூ200 உபிஸ் இருக்காங்களே. அது மட்டும் இல்லே பேரு தமிழன்மாதிரி இருக்கும் .ஆனா மூர்க்கன்ஸ்கள் பேரு மட்டும் தமிழன் பேரு மாதிரி இருக்கும்.


பாமரன்
ஏப் 20, 2025 23:06

நாங்க ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும் ...


Pandi Muni
ஏப் 20, 2025 17:59

மாநகராட்சி அதிகாரிங்க ஒருத்தனும் சாகலையாமே. அது சரி சாக்கடை கலந்த நீரை குடிக்க சாதாரண குடிமக்களா என்ன?


முக்கிய வீடியோ