உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தொழில்துறை மேம்பாடு என்பது ஒரு வீண் வேலைத்திட்டம் அல்ல. இது இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்புக்கான பொருளாதார சமத்துவத்திற்கான பணியாகும்.முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு செல்ல விரும்புகின்றனர். தி.மு.க., அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நமது தொழில்துறை செயலிழந்து போயுள்ளது. நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் வெளியேறுகின்றனர். இதை மாற்ற அ.தி.மு.க., உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சியை தமிழகம் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு நின்றுவிடுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூன் 30, 2025 16:21

இந்தியா லெவல்லேயே வேலை வாய்ப்பு குறைஞ்சிருக்காம். இவரை தமிழ்நாட்டப் பத்தி பேச வந்துட்டாரு


S.L.Narasimman
ஜூன் 30, 2025 13:38

போதைபொருள் கள்ளசாராய விற்பனை அதனால் அளப்பரிய வேலைவாய்ப்புகள் மூலம் முன்னேற்றி அகில உலகத்தில் முண்ணனி மாநிலமாக விடியல் திகழ வைத்துள்ளதற்கு எடப்பாடியார் பாராட்டமறுப் பதேன்.


Narayanan Muthu
ஜூன் 30, 2025 12:34

இருந்த வேலை வாய்ப்புகளை வடநாட்டானுக்கு தாரைவார்த்த பேசரபேச்சை பாரு.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 14:35

தமிழ்நாட்டு இளைஞர்களை டாஸ்மாக்கை திறந்து குடிக்கவைத்து மட்டையாக்கிவிட்டீர்கள் ..கொஞ்சம் தெளித்திருந்தவர்களையும் போதைப்பொருள் புழங்கவைத்து ..சொங்கிகளாக மாற்றிவிட்டிர்கள் அப்புறம் தமிழ்நாட்டு வேலையை வடநாட்டான் செய்யாமல் அமெரிக்காவிலிருந்தா வந்து செய்வார்கள் ..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 11:43

டாஸ்மாக் கடைகளை திறப்பதில் முழு வெற்றி பெற்றிருக்கிரோம் ... அதை பாராட்டுங்க இ பி எஸ் ...


முக்கிய வீடியோ