உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி: அண்ணாமலை

திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி: அண்ணாமலை

சென்னை: நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., அரசு முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p48i3hmq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வியடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.இளம் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2024ம் ஆண்டில் மட்டும், 13 - 19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ளனர். இது, 2023ம் ஆண்டை விட, சுமார் 35% அதிகம். பள்ளிக் குழந்தைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம், குறைந்தது 10 மாவட்டங்களில் முற்றிலுமாகச் செயல்படவில்லை. 15 மாவட்டங்களில், போதுமான உறுப்பினர்கள் இல்லை.பெண் குழந்தைகள் நலனுக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், இவை எதையும், தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு புறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம், மற்றொரு புறம், அவற்றைக் கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளைச் செயல்படாதவண்ணம் முடக்கி வைப்பது என, நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ss
பிப் 05, 2025 23:39

Then - Police Hero Now - Political Clown Tomorrow - Back to School Student Repeat tu


Narayanan Muthu
பிப் 05, 2025 19:48

திமுக அரசு நூறு சதம் வெற்றி என்பதை அண்ணாமலையின் கருத்து பறைசாற்றுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இவர் பேச்சுக்கு எதிர்மறையான அர்த்தம் தான் நடைமுறை.


Murugesan
பிப் 05, 2025 22:20

உன்னுடைய மகளுக்கும் நடக்கும்போது அதனுடைய வலி என்ன என்று தெரியும் திராவிட அயோக்கியனுங்க காலைக்கழுவிக்குடிக்கிற அடிமைகள, தலைவரைப் போலவே தொண்டன்களும் அயோக்கியனுங்க


Priyan Vadanad
பிப் 05, 2025 19:41

செருப்பு போடாமல் கால் சூட்டில் ஏசுகிறார் போல தெரிகிறது.


Priyan Vadanad
பிப் 05, 2025 19:40

ராத்திரி குடுகுடுப்பைக்காரன் மாதிரி கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குதுன்னு கூவிகிட்டு


Priyan Vadanad
பிப் 05, 2025 19:36

இவர் வேற அப்பப்ப ராத்தரி குடுகுடுப்பைக்காரன் மாதிரி புலம்பிகிட்டு


சிவம்
பிப் 05, 2025 17:41

அண்ணே, நீங்கள் வெற்றி பெற்றால் தான் திமுக தோல்வி என்பது பொருள். அதுவரை, இது எவரும் குறை சொல்ல முடியாத ஆட்சிதான்.


Balasubramanian
பிப் 05, 2025 17:05

மெஜாரிட்டி மக்களுக்கு துரோகம் இழைத்து மைனாரிட்டி களுக்கு மட்டுமே குடை பிடிக்கும் மாடல் அரசு கடவுள் சிலைகளை உடைத்து தமிழை கேவலமாக பேசியவருக்கு சிலை எடுத்து மாலை அணிவித்து மரியாதை செய்து இந்துக்களுக்கு அநியாயம் இழைத்து ஆங்கில ஆட்சியின் அராஜக போக்கை விட அதிகமாக போலீஸ் கெடுபிடி செய்யும் சர்வாதிகார அரசு!


raja
பிப் 05, 2025 16:59

குடும்பத்தை அடித்து விரட்டினால் ஒழிய தமிழனுக்கு விடிவு இல்லை...


புதிய வீடியோ