உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரவு தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கச்சத்தீவு ஒப்பந்தத்தை திமுக அரசு முழுவீச்சில் எதிர்த்தது. இது பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் எதிரொலித்தது. கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் முன் மாநில அரசை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. கச்சத்தீவை முழுமையாக விட்டுக்கொடுத்தது அப்போதைய மத்திய அரசு தான். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

TSRSethu
ஜூலை 03, 2024 09:03

கச்சத்தீவை இந்திரா காந்திக்கு பயந்து தாரை வார்த்து விட்டு இப்போது மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறார். மீத்தேன் விஷயத்திலும் இதே தான் நடந்தது. தமிழக மக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும்


அறிவழகன்
ஜூலை 03, 2024 00:37

நான் தீர்வு சொல்லட்டுமா? தினமும் 10 டன் மீன் இறக்குமதி செஞ்சு மீன் பிடிக்கப்.போகும்.மீனவர்களுக்கு குடுத்திரலாம். அவிங்களும்.இலங்கப் பக்கம் போய் திருட்டு மீன் பிடிக்க மாட்டாங்க. சட்டசபையில் விதி 110 ந் கீழ் ஒரு 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கிடலாம்.


Bala
ஜூலை 02, 2024 23:55

தமிழ் - பூனை மேல் மதில், ஆங்கிலம் - development only வளர்ச்சி மட்டும், இந்தி - தெரியாது , அப்ப தெலுங்கில் கடிதம் எழுதியிருப்பார்


S. Narayanan
ஜூலை 02, 2024 22:05

இவர்கள் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமல் தாரை வார்த்து விட்டு இப்போது எங்களை கேட்கவில்லை என்று அவர்கள் கையலாக தனத்தை எப்படி வெட்கம் இல்லாமல் சொல்கிறார்.


Mohanakrishnan
ஜூலை 02, 2024 21:02

1967 முதல் 2014 வரை எத்தனை கடிதம், எத்தனை கிழி.... பின்னர் பேசவும்


தமிழ்வேள்
ஜூலை 02, 2024 20:30

கொலைகாரன்களை வெளியே விட இலங்கை அரசு திமுக இல்லை முதல்வரே.....


Nagendran,Erode
ஜூலை 02, 2024 19:40

அறிவாலய அடிமைகள் தங்களை அறிவால் உயர்ந்தவர்கள் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கிறார்கள் அப்படியெல்லாம் இல்லை அது ஒரு மாய பிம்பம் என்று நாம் சொன்னால் அதை புரிந்து கொள்ள கூடிய பகுத்தறிவு அவர்களுக்கு இருக்குமா என்றுதான் தெரியவில்லை.


M.S.Jayagopal
ஜூலை 02, 2024 19:24

தமிழக மீனவர் பிரச்சினை நிரந்தரமாக தீர என்ன வழி என்று இவர் விளக்குவாரா?


nsathasivan
ஜூலை 02, 2024 18:50

கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு இப்போது குய்யோ முறையோ என்று அலறுவதேன்.


Venkateswaran Ramamoorthy
ஜூலை 02, 2024 18:34

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி கள்ளச்சாராயம், போதை ல்லாத மாநிலமாக செய்வது மிகவும் அவசியம் ✍️ இது மாநில அரசால் முடியும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி