உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் அரசியலை தாண்டியது தி.மு.க., - கம்யூ., நட்பு: ஸ்டாலின் உருக்கம்

தேர்தல் அரசியலை தாண்டியது தி.மு.க., - கம்யூ., நட்பு: ஸ்டாலின் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க.,வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் நட்பு, இடையிடையே விடுபட்டு இருக்கலாம். ஆனால், இரண்டு கட்சிகளுக்குமான நட்பு, தேர்தல் அரசியலை தாண்டிய கொள்கை நட்பு,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நுாற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், 'நுாறு கவிஞர்கள் - நுாறு கவிதைகள்' நுாலை வெளியிட்டு, நுாற்றாண்டு விழா நினைவு பரிசை நல்லகண்ணுவிற்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்துள்ளேன். அவரது வாழ்த்தை விட, பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்து விடப்போவது இல்லை. ஈ.வெ.ரா.,வுக்கும், கருணாநிதிக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவிற்கு கிடைத்துள்ளது.அவர், 100 வயதை கடந்து, நமக்கு வழிகாட்டி, தமிழ் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கிறேன் என்ற, உள்ள உறுதியோடு அமர்ந்திருக்கிறார். அவர் கட்சிக்காக உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். அதனால் தான் வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார். அவர், 12 வயதில் போராட்டக்காரனாக உருவாகி, 15 வயதில் பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 18 வயதில் இந்திய கம்யூ., கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.அவரது தியாக வாழ்வானது, தலைமறைவு வாழ்க்கை, சிறைச்சாலை சித்ரவதை போன்றவை அடங்கியது. தாமிரபரணியை காக்க, அவர் நடத்திய போராட்டம் அனைவருக்கும் தெரியும். நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது, வீட்டு வேலையாக அமைகிறது.ஆனால், நல்லகண்ணுவிற்கு எந்த நேரமும், பொதுமக்கள் குறித்த சிந்தனையும், அவர்களுக்காக உழைப்பதை தவிர வேறு வேலையே இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. நாட்டுக்காக சதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி, ஏழு ஆண்டுகள் சிறை வைத்த காலம் மாறி, உயர் நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு தன் உண்மையான உழைப்பால் உயர்ந்தவர்.ஒரு லட்சியத்திற்காக உண்மையாக உழைத்தால், அனைத்து அமைப்புகளின் நன்மதிப்பையும் பெறலாம் என்று நிரூபித்தவர். அவரது நுாற்றாண்டு விழா கொண்டாடும் நாளில், இந்திய கம்யூ., கட்சியும் நுாற்றாண்டு விழா கொண்டாடுகிறது.தி.மு.க.,வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் நட்பு, இடையிடையே விடுபட்டு இருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தொடரும். இரண்டு கட்சிகளுக்குமான நட்பு என்பது, தேர்தல் அரசியலை தாண்டிய கொள்கை நட்பு.ஜாதி, வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம், எதேச்சதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக, ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவது தான், நல்லகண்ணுவிற்கு நாம் வழங்கும் நுாற்றாண்டு விழா பரிசு.இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், தர்மலிங்கம் அறவழி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் மணிவண்ணன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஆரூர் ரங்
டிச 30, 2024 14:17

பிரம்மாண்ட எட்டு மாடி கட்டிட அலுவலகத்தை கட்டமுடிந்த கம்யூனிஸ்ட் கட்சியால தனது முதிய தலைவருக்கு ஒரு சிறிய பகுதியை குடியிருக்க கொடுக்க மனதில்லை. அரசிடம் கையேந்த வைத்துவிட்டது .ஆக அந்த 15 கோடியும் ஏப்பம் விடப்பட்டு விட்டதா?


தமிழ்வேள்
டிச 30, 2024 12:50

நீ மட்டும் 25 கோடி இல்லைன்னு சொல்லிப்பாரு தல ....அப்புறம் நட்பூ , நடிப்பூ எல்லாம் எப்படின்னு பாரு ..


Rajasekar Jayaraman
டிச 30, 2024 11:53

கொள்ளையில் பங்கு


lana
டிச 30, 2024 10:32

சரி அந்த 7 வருடம் சிறையில் அடைத்தது யார். மீண்டும் அவர்களுடன் கூட்டணி ஏன்.


Shekar
டிச 30, 2024 09:33

நல்லவரு, வல்லவருன்னு சொல்றீங்க, அப்படி என்னய்யா நல்லது செய்தார். என் சிற்றறிவுக்கு எதுவும் எட்டவில்லை. கற்றறிந்தோர் கொஞ்சம் விளக்குவார்களாக.


Nagarajan D
டிச 30, 2024 09:16

பின்ன 25 கோடி விலையில் உங்க கூட்டத்தை அவனுங்க வாங்கிட்டானுங்களே அப்பறம் என்ன தேர்தல் தாண்டி விண்ணை தாண்டி என்று புலம்பல்...


RAMAKRISHNAN NATESAN
டிச 30, 2024 09:08

ஈரோடு, திருமங்கலம் சார்ந்த பெருமைகளில் வாய்பொத்தி இருப்பது மட்டுமல்ல ..... திராவிட மாடலின் அத்தனை அட்டூழியத்திற்கும் மவுனம் காப்பதால் அந்த உறவு தேர்தல் அரசியலைத் தாண்டியதுதான் ......


கிஜன்
டிச 30, 2024 08:17

நல்லக்கண்ணு ஐயா வாழ்க .... டைமண்டுக்கும் ...கம்மிஸ்க்கும் ...என்ன சம்மந்தம் ?


Kasimani Baskaran
டிச 30, 2024 07:58

படாவதியான கம்முனிச கோட்பாடுடைய ஒரு கட்சியை ரூ 25 கோடி விலை கொடுத்து வாங்கிய பின்னர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.


அப்பாவி
டிச 30, 2024 07:46

ஆட்சியில்தான் பங்கில்லை. ஆட்டையிலாவது பங்கு உண்டா அவிங்களுக்கு?


ராமகிருஷ்ணன்
டிச 30, 2024 11:41

ஆட்டையில் பங்கு கொடுத்தால் கோர்ட் கேசு என்று வரும் போது கூட ஜெயிலுக்கு வருவீயா. தலமைக்கு மட்டும் தான் பங்கு தருவோம். அப்பத்தான் திமுகவின் கூலிப்படை, வக்கீல்கள் அணி வேலை செய்யும். 1000 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து நீதிபதிகளை விலகி ஓடவே வைப்பான்கள். அணில் அண்ணனுக்கு நடந்ததை நினைத்து பாருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை