தமிழகத்தில் திமுகவிற்கு இடமில்லை; மக்களை திசை திருப்ப நாடகம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் திமுகவிற்கு இடமில்லை. திசை திருப்ப நாடகம் நடத்துகின்றனர் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வணக்கம் முதல்வர் ஸ்டாலின். பீஹாரில் காங்கிரசிற்கு இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்துவிட்டதால், மக்களைத் திசைதிருப்பவே ராகுல் ஹரியானாவைக் கையில் எடுத்துள்ளார் என்பதை அனைவரும் அறிவர்.எங்கேயோ கேட்டதைப் போல இருக்கிறதா? ஆமாம், தமிழகத்தில் திமுகவிற்கு இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து, மக்களைத் திசைதிருப்ப வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கையில் எடுத்த தங்களது பாணி தான் இந்த நாடகத்திற்கு அடிப்படையே.அரசியல் சாசனத்தின்படி தன்னிச்சையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை இப்படி எந்தவொரு அடிப்படையுமின்றி குறை சொல்வதை விடுத்து, தங்களுக்கு ஓட்டளித்த தமிழக மகளிரின் பாதுகாப்பை மேம்படுத்தி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்வது தான் தற்போதைய உண்மையான தேவை. இதை செய்வீர்களா, முதல்வரே? நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.